(contd.. from the previous post)
Bala Kanda : Sarga 43
Bala Kanda : Sarga 43
Introduction
Ganga
descends to Earth by the extraordinary efforts of Bhageeratha. Shiva agrees to
the alighting of Ganga on His head, from
where she is released into a lake called Bindusarovar and from there she flows
in seven courses. On land Bhageeratha ushers her up to netherworld dug by his
ancestors where heaps of ashes of his grandparents are there, and she enters
accordingly to inundate those mounds of ashes according salvation to the souls.
*
* *
பிறகு
பகீரதன் கால் கட்டை விரலை பூமியில் ஊன்றிக் கைகளை உயரத்தூக்கிக்கொண்டு, யாதொரு பற்றுமின்றி,
காற்றே உணவாக கட்டயைபோல் அசையாமல் இரவும் பகலும் பரமசிவனை குறித்து
தவம் செய்தார். பிறகு மகாதேவன் பார்வதியுடன் அவருக்கு பிரஸன்னமாய், " ராஜசிரேஷ்டா! உன் தவத்தால் திருப்தியடைந்தேன். உன் இஷ்டப்படி பர்வதராஜ
புத்திரியான கங்கையை தலையில் தரிக்கிறேன்" என்றார். அப்பொழுது ஸகல லோகங்களிலும் கொண்டாடப்பட்ட கங்கை,
பெரிய ரூபத்துடனும் தாங்க முடியாத வேகத்துடனும் ஆகாசத்திலிருந்து
பரமசிவனுடய சிரஸில் விழுந்தாள்.
"என்
வேகத்தை தாங்கக்கூடியவர்களுமுண்டோ? இந்த சங்கரனையும் அடித்துக்கொண்டு பாதாளத்திற்கு போவேன்" என்றாள். அவளுடைய
கர்வத்தை அறிந்த ருத்ரன் கோபம் கொண்டு அவளை மறைக்க நினைத்தார். அவருடைய புண்ணியமான
சிரஸில் விழுந்தவுடன் ஜடாமண்டலமென்ற பெரும் வலியால் சிக்கிக்கொண்டு வெளியில் போக
வழி தெரியாமல் பல வருஷங்கள் வரையில் அலைந்து திரிந்தாள்.
"பரம சிவனுடைய தலையில் கங்கை விழுந்ததை பார்த்தேன்.
உடனே பூமிக்கு வர வேண்டியதல்லவா? இவ்வளவு காலமாயும் ஏன் இன்னும்
வெளிப்படவில்லை . ஸர்வேசுவரனான சங்கரனையே சரண மடைய வேண்டும்" என்று
மறுபடியும் அவரை குறித்து தவம் செய்தார். அதானால் பகவான் ஸந்தொஷித்து பிரஹ்மாவால்
ஸிருஷ்டிக்கப்ப பிந்துரசில் கங்கையை விட்டார்.
அவள் அப்போது ஏழு பிரவாகங்களாய் பூமியில் விழுந்தாள் . அவைகளில்
ஹ்லாதினி, பாவனை,நளினி என்றவை
கிழக்கிலும், ஸுசக்ஷுஸ் , ஸுதா ,
ஸிந்து என்றாய் மேற்கிலும் ஓடின. ஏழாவதான பிரவாஹம் பகீரதனை
பின் தொடர்ந்தது. அந்த ராஜசிரேஷ்டர் திவ்வியமான ரதத்தில் ஏறிக்கொண்டு முன்னே
போனார். கங்கைக்கு "த்ரிபதகா" என்ற பெயர் வந்த விதத்தை சொன்னேன்.
அவளுடைய அற்புதமான செய்கைகளை சொல்லுகிறேன்
ஆகாசத்திலிருந்து சிவனுடைய சிரசிலும் அங்கிருந்து
பூமியிலும் விழ்ந்ததால் அந்த ஜலம் பயங்கர சப்தத்துடன் வந்தது. மீன், ஆமை ,சிம்சுமாரம்,
முதலை முதலிய ஜல ஜந்துக்கள் அதில் துள்ளி விழுந்து
கொண்டிருந்தபடியால் பூமி விளங்கிற்று. ஆகாசத்திலிருந்து கங்கை பூமிக்கு வரும்
ஆச்சரியத்தை பார்க்கத் தேவ-ரிஷி-கந்தர்வ-யக்ஷ ஸித்த கணங்கள் நகரங்களை போன்ற விமானங்களிலும் குதிரைகளிலும்
யானைகளிலும் கூட்டம் கூட்டமாய் அங்கே வந்தார்கள்.
அவர்களின் தேக
காந்தியாலும் ஆபரணங்களின் பிரகாசத்தினாலும் எண்ணிறைந்த ஸூரியர்கள் விளங்குவது போல் ஆகாசம்
மேகங்களில்லாமல் ஜொலித்தது. கங்கையில் மீன் சிம்சுமாரம் முதலிய ஜல ஜந்துக்கள்
அங்குமிங்கும் துள்ளுவதால் மின்னல்கள் பாய்வது
போலிருந்தது. நான்கு புறங்களிலும் பல விதமாய் வாரியிறைக்கப்பட்ட நுரைகளாலும் நீர்த் திவலைகளாலும்
, ஹம்ச கூட்டங்களுடன் கூடிய வெண்மையான சரத் கால மேகங்களால்
ஆகாசம் நிறைந்தது போலிருந்தது.
அந்த நதியின் ஜலம் சிலவிடங்களில் அதிவேகமாயும் , சிலவிடங்களில்
கோணலாயும், சிலவிடங்களில் நேராயும், பள்ளங்கள் கீழாயும் , கல் முதலியவைகளால்
தடுக்கப்பட்ட போது மேல் முகமாயும், சிலவிடங்களில்
மெதுவாயும், சிலவிடங்களில் அலைகளின் வேகத்தால்
ஜலத்துடன் ஜலம் மோதிக்கொண்டு அடிக்கடி எதிர்த்து ஓடிக்கொண்டும் பூமியில் விழுந்தது.
பரமசிவனுடைய தலையில் விழுந்து அங்கிருந்து பூமிக்கு
வந்ததால், நிர்மலாமாய் பாபங்களை போக்கும் புண்ணிய
தீர்த்தமாயிற்று. தேவர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும்
, பூமியில்லுள்ளவர்களும், " பரமசிவனே
இதை தலையால் தாங்கினதால் இது மஹா பரிசுத்தமான தீர்த்தம், அவருடைய
தேகத்தில் பட்டு பூமியில் விழுந்ததால் இதற்க்கு விசேஷ சுத்தியுண்டாயிற்று "
என்று அதில் ஸ்நானம் செய்தார்கள். சாபத்தால் தேவ லோகத்திலிருந்து பூமிக்கு
வந்தவர்களும் அதில் ஸ்நானம் செய்து பாபங்கள் நீங்கி புண்ணிய லோகங்களுக்கு
போனார்கள். பூமியிலுள்ளவர்கள் அதில் ஸ்நானம் செய்து பாபங்கள் விலகி பரமானந்தம் அடைந்தார்கள்
.
ராஜரிஷியான பகீரதர் திவ்ய ரதத்தில் ஏறிக்கொண்டு முன்னே
சென்றார். கங்கை அவரை பின் தொடர்ந்தாள். தேவ-ரிஷி-தைத்ய-தான-ராக்ஷஸ-கந்தர்வ-யக்ஷ-கின்னர-உரக- அப்ஸரஸ் கணங்களும் ஜல ஜந்துக்களும்
பகீரதனை பின் தொடர்ந்தார்கள். அவர்கள் போகும் வழியெல்லாம் கங்கையும் போய்
ஸமஸ்த பாபங்களையும் நாசம் செய்தது.
வழியில் ஜன்ஹு ரிஷி யாகம் செய்த இடத்தில பரவி, யாக
பதார்த்தங்களை அடித்துக்கொண்டு போயிற்று. அவளுடைய கர்வத்தால் அந்த ரிஷி
கோபங்கொண்டு அந்த ஜலம் முழுவதையும் குடித்து விட்டார். அந்த ஆச்சரியத்தால் தேவரிஷி
கணங்கள் பிரமித்து அந்த மஹாத்மாவை பல விதமாய் பிரார்த்தித்து, " ஸ்வாமி ! கங்கையின் அபராதத்தை பொருக்க வேண்டும். தங்களுடைய தேகத்திலிருந்து
வெளிப்படுவதால் அவள் தங்களுக்கு பெண்ணாகட்டும்." என்றார்கள். அதனால்
அவர் ஸந்தொஷித்து கங்காப் பிரவாஹத்தை தன காது வழியே வெளியிட்டார். அன்று முதல்
அவளுக்கு ஜான்ஹவி ( ஜன்ஹுவின் புத்திரி ) என்று பெயராயிற்று.
பிறகு அவள் பகீரதரை பின் தொடர்ந்து ஸமுத்திரதிர்க்கு வந்து
அங்கிருந்து ரஸாதலத்திற்கு போனாள். தன முன்னோர்கள் எரிந்து கிடக்குமிடத்திர்க்கு
அவர் அவளை அழைத்துக்கொண்டு போய், அவர்கள் சாம்பலாய் இருப்பதைக்கண்டு மிகவும் வருத்தப்பட்டார். அந்த புண்ய ஜலம் சாம்பல் மேட்டை
நனைத்தவுடன் ஸகர புத்திரர்கள் பாபம் ஒழிந்து உத்தம லோகங்களை அடைந்தார்கள்.
*
* *
देव देवे गते तस्मिन्सोऽङ्गुष्ठाग्रनिपीडिताम् |
कृत्वा वसुमतीम् राम संवत्सरम् समुपासत ||१||
தே3வதே3வ
க3தே
தஸ்மிந் ஸோऽங்கு3ஷ்டா2க்3ரநிபீடிதாம் |
க்ருத்வா வஸுமதீம் ராம ஸம்வத்ஸரமுபாஸத
||
When the God of gods Brahma left from there Bhageeratha
stood on the tip of his big-toe praying for the mercy of Lord Shiva for one
year, while that tip of his big-toe pressurised the earth." Thus Vishvamitra continued his narration about
Bhageeratha's effort to bring Ganga to earth. {Bhageeratha stood on one big-toe
with an unwavering intent and bodily movement, and with his hands upraised in
prayer for a period of one year by day and night, sustaining himself on mere
air, and thus his yogic concentration increased and that alone pressurised the
earth.}
தேவ தேவனான ப்ரஹ்மா சென்றதும், பகீரதன் ஒரு
காலின் விரலை மட்டும் தரையில் ஊன்றி கொண்டு , ஒரு வருட காலம் பரமேஸ்வரனை குறித்து தவம்
செய்தான்
*
* *
ऊर्ध्वबाहुर्निरालम्बो
वायुभक्षो निराश्रय : |
अचल:
स्थाणुवत्स्थित्वा रात्रिंदिवमरिन्दम ||२||
अथ संवत्सरे पूर्णे सर्व लोक नमस्कृतः |
मापतिः पशुपती राजानम् इदम् अब्रवीत् ||३||
ஊர்த்4வபாஹுர்நிராலம்போ3 வாயுப4க்ஷோ
நிராஶ்ரய :|
அசல: ஸ்தா2ணுவத் ஸ்தி2த்வா ராத்ரிம் தி3வம்ரிம்த3ம ||
அத2 ஸமவத்ஸரே பூர்ணே ஸர்வலோகநாமஸ்க்ருத : |
உமாபதி: பஶுபதீ ராஜாநமித3ப்3ரவீத்
||
On completion of one year, he who is
venerated by all worlds, the consort of Uma and the god of animals from insects
to humans, that god Shiva revealed himself and spoke this to the king.
இரண்டு கைகளும் மேல்
நோக்கி நின்றன;
பிடிப்பு ஏதும் இல்லை; காற்றே உணவு; ஆதாரமும் இல்லை. தூணைப்போல் அசைவில்லாமல் நின்று இரவு-பகலாக தவமியற்றினான்.
ஓராண்டு இவ்வாறாக பகீரதன் தவம் இருந்தான். பிறகு மகாதேவன் பார்வதியுடன் அவருக்கு பிரஸன்னமாய் கூறினார் - .
*
* *
प्रीतस्तेऽहं नरश्रेष्ठ करिष्यामि तव प्रियम् |
शिरसा धारयिष्यामि शैलराज सुतामहम् ||४||
ப்ரீதஸ்தேऽஹம் நரஶ்ரேஷ்ட2 கரிஷ்யாமி தவ ப்ரியம் |
ஶிரஸா
தா4ரயிஷ்யாமி
ஶைலராஜ ஸுதாமஹம் ||
Oh, best one among humans, I am
delighted with your unwavering effort, and I will fulfil your cherish. I will
therefore sustain Ganga, the daughter of king of mountains by my head.
மாமனிதனே ! உன் தவத்தால் நான் மகிழ்ச்சி
அடைந்துள்ளேன்.உனக்கு
பிரியமான காரியத்தை செய்து தருகிறேன். ஹிமவானின் மகளை என் தலையில்
தாங்கிக்கொள்கிறேன்
ततो हैमवती ज्येष्ठा सर्व लोक नमस्कृता |
तदा साति महत् रूपम् कृत्वा वेगम् च दुःसहम् ||५||
आकाशाद पतत् राम शिवे शिवशिरस्युत |
ததோ ஹைமவதீ ஜ்யேஷ்டா2 ஸர்வலோக நமஸ்க்ருதா |
ததா ஸாதிமஹத்3ரரூபம்
க்ருத்வா வேக3ம் ச து3:ஸஹம் ||
ஆகாஶாத3பதத்3 ராம ஶிவே ஶிவஶிரஸ்யுத ||
Afterwards, she who is revered by
all the worlds and who is the elder daughter of Himavanta, that Ganga assuming
an unendurable form and an insupportable rapidity, they say, then plunged from
the sky onto the auspicious head of Shiva.
ஹிமாவனின் மூத்த புதல்வியும் , எல்லா மக்களாலும் போற்றபடுபவளான
கங்கை மிகப் பெரிய உருவமேற்று, தாங்கமுடியாத வேகத்துடன் ஆகாசத்திலிருந்து
மங்களமயமான சிவனுடய தலையில் விழுந்தாள்
*
* *
अचिन्तयच्च सा देवी गंग परमदुर्धरा
||६||
विशाम्यहम् हि पातालम् स्त्रोतसा गृह्य शंकरम् |
அசிந்தயச்ச ஸா தே3வீ க3ங்கா3 பரமது3ர்த4ரா
|
விஶாம்யஹம் ஹி பாதாளம்
ஸ்ரோதஸா க்ருஹ்ய ஶங்கரம் ||
She who is an extremely unendurable
river that goddess Ganga even speculated saying to herself, 'let me enter
netherworld, indeed whisking Shiva with my streams.'
தாங்கி கொள்ள முடியாத
அளவுக்கு வேகமும் உருவமும் கொண்ட கங்கை,' என்னுடைய
ஓட்டத்தின் வேகத்தில் சங்கரனையும் இழுத்துக்கொண்டு பாதாளத்திற்குள் புகுந்து
விடுகிறேன்" என்று எண்ணினாள்
तस्याः वलेपनम् ज्ञात्वा क्रुद्धस्तु भगवन् हरः ||७||
तिरोभावयितुम् बुद्धिम् चक्रे त्रिनयनस्तदा |
தஸ்யா வலேபநம் க்ஞாத்வா கருத்3த4ஸ்து
ப4க3வாந் ஹர : |
திரோபா4வயிதும் பு3த்3தி4ம் சக்ரே த்ரிணயநஸ்ததா3 ||
Discerning her egotism god Shiva is
infuriated, and then on his part that three-eyed god Shiva thought to pent her
up in the tufts of his head-hair.
தன்னை தாழ்வாக மதிக்கும் அவள்
எண்ணத்தை அறிந்து மிகவும் கோபம் கொண்ட பகவான் சங்கரன், கங்கையை மறைந்து போகும்படி செய்துவிட முடிவு செய்தார்
*
* *
सा तस्मिन् पतिता पुण्या पुण्ये रुद्रस्य मूर्धनि||८||
हिमवत् प्रतिमे राम जटा मण्डल गह्वरे |
ஸா தஸ்மிந் பதிதா புண்யா புண்யே ருத்3ரஸ்ய மூர்த4நி |
ஹிமவத்ப்ரதிமே ராம ஜடாமண்ட3ல க3ஹ்வரே ||
And oh, Rama, she that holy River
Ganga swooped down into the cavernous curls of matted hair-tufts on the holy
head of God Shiva, and she became a detainee in them.
புனிதமான கங்கை ருத்ரனுடய சிரஸில்
குதித்தாள். இமாலயத்தை போன்று வெகு
விஸ்தாரமாக இருந்த அவருடைய சடைக்கற்றை என்ற குகைக்குள் சென்ற அவள், அங்கேயே சிக்கிகொண்டாள்.
*
* *
सा कथंचित् महीम् गंतुम् नाशक्नोत् यत्नमास्थिता ||९||
नैव
निर्गमनं लेभे जटा मण्डल मोहिता|
ஸா கத2ஞ்சிந் மஹீம்
க3ந்தும் நாஶக்நோத்3 யத்நமாஸ்தி2தா ||
நைவ நிர்கமநம்
லேபே4 ஜடாமண்ட3லமோஹிதா |
Though she strove hard in one way or
another to reach the earth that Ganga was rendered incapable, as she could not
gain access for an outlet from any edge of the coils of matted hair-tufts of
Shiva, hence she is held there in durance vile.
எவ்வளவோ முயன்றும் கூட, எவ்விதத்திலும் பூமிக்குள் செல்ல சக்தியற்றவள் ஆனாள். சடைக்கூட்டத்தில் திக்கு திசை புரியாமல் சிக்கி
தவித்த அவள்,
வெளியே வரும் வழியை காணவில்லை. அநேக ஆண்டு காலம் சடை முடியிலேயே சுற்றி
கொண்டிருந்தாள்
*
* *
तत्रैवावंभ्रमत देवी संवत्सर गणान् बहून् ||१०||
तामपश्यन्
पुनस्तत्र तपः परममास्थितः |
தத்ரைவாப3ம்ப்3ரமத்3தே3வீ ஸம்வத்ஸரக3ணாந் ப3ஹூந் ||
தாமபஶ்யந் புநஸ்தத்ர தப : பரமமாஸ்தி2தா: ||
Goddess Ganga whirled round and round in the coils of tufts
alone for many number of years, and when Ganga's emanation from those coils was
intangible Bhageeratha again firmed up in a marvellous penance in the matter of
her descent to earth.
ரகுநந்தநா ! சங்கரனின்
சடையில் புகுந்த கங்கை வெளியே வர முடியாததால் பகீரதன் மறுபடியும் கடுமையான
கட்டுப்பாடுகளுடன் தவம் செய்தான்.
*
* *
अनेन
तोषितश्राभूदत्यर्थं रघुनंदन ||११||
विससर्ज ततो गंगाम् हरो बिन्दु सरः प्रति |
அநேந தோஷிதஶ்சாபூ4த3த்யர்த2ம் ரகு4நந்த3ந
||
விஸஸர்ஜ ததோ க3ங்கா3ம்
ஹரோ பி3ந்து3ஸர: ப்ரதி |
Oh, Rama, the legatee of Raghu, with
that ascesis of Bhageeratha god Shiva is very much delighted, and thereupon he has also released Ganga
aiming at Bindu Lake in Himalayas.
பரமசிவன் மிகவும்
மனமகிழ்ச்சி அடைந்தார். பின்னர் பிந்துரஸ் என்ற நீர்நிலையில் பரமேஸ்வரன் கங்கையை
பாயவிட்டார்.
*
* *
तस्यम् विसृज्यमानायाम् सप्त स्त्रोतांसि जज्ञिरे ||१२||
ह्लादिनी पावनी चैव नलिनी च तथाऽपरा |
तिस्रः प्राचीम् दिशम् जग्मुर्गङ्गा शिवजलाः शुभाः||१३||
தஸ்யாம் விஸ்ருஜ்யமாநாயம் ஸப்த ஸ்ரோதாம்ஸி ஜக்ஞிரே ||
ஹ்லாதி3நீ பாவநீ சைவ நளிநீ ச ததா2 பரா |
திஸ்ர: ப்ராசிம் திஶம் ஜக்3முர் க3ங்கா3:
ஶிவஜலா : ஶுபா4:||
While god Shiva released Ganga into
Bindu Lake seven streams have emerged out of it, and thus three auspicious
Ganga-s with holy waters have cruised eastward which are known as Hlaadini, Paavani,
and Nalini.
அவள் அப்போது ஏழு பிரவாகங்களாய்
பூமியில் விழுந்தாள் .
அவைகளில் ஹ்லாதினி, பாவனை,நளினி என்றவை கிழக்கிலும், ஸுசக்ஷுஸ் , ஸுதா , ஸிந்து என்றாய் மேற்கிலும் ஓடின.
*
* *
सुचक्षुस्चैव सीता च सिन्धुस्चैव महानदी |
तिस्रस्त्वेता
दिशम् जग्मु: प्रतीचिम् तु शुभोदका ||१४||
ஸுசக்ஷுஶ்சைவ ஸீதா ச ஸிந்து4ஶ்சைவ மஹாநதீ3 |
திஸ்ரஸ்த்வேதா தி3ஶம் ஜக்3மு: ப்ரதீசிம் து ஶுபோ4தகா: ||
Also thus Sucakshu, Seetha, and the
excellent river Sindhu are the other three rivers which streamed to the
westward direction with their holy waters.
கங்கையின் புனித நீரை கொண்ட
ஹ்லாதினீ,
பாவனீ, நளினீ என்ற மூன்று
ஆறுகளும் கிழக்கு நோக்கி சென்றன. தெள்ளிய நீரை கொண்ட ஸுசக்ஷு , சீதா , மகாநதியான சிந்து ஆகிய மூன்று நதிகளும் மேற்கு திசையை நோக்கி சென்றன.
सप्तमी
चान्वगात् तासां भगीरथ मथो नृपं ||१५||
भगीरथोऽपि
राजर्षिर्दिव्यं स्यंदनमास्थितः |
प्रायातग्रे महातेजा गङ्गा तम्
चाप्यनुव्रजत् ||१६||
ததை2வாலகநந்தா3 ச விஶ்ருதா லோகபாவநீ |
ஸப்தமீ சாந்வகா3த் தாஸாம் ப4கீ3ரத2மதோ2 ந்ருபம்
||
ப4கீ3ரதோ2ऽபி ராஜர்ஷிர் தி3வ்யம் ஸ்யந்த3நமாஸ்தி3த : |
ப்ராயாத3க்3ரே மஹாதேஜா க3ங்கா3 தம் சாப்யநுவ்ரஜத் ||
ப்ராயாத3க்3ரே மஹாதேஜா க3ங்கா3 தம் சாப்யநுவ்ரஜத் ||
Of them the seventh Ganga flowed
towards the path of Bhageeratha' chariot, and that great-resplendent and kingly
sage Bhageeratha sitting in a divine chariot moved ahead and even Ganga
followed him.
அவைகளுள் ஏழாவதான, உலகத்தை புனிதமாகும் அலகானந்தா என்று கீர்த்தி பெற்ற ஆறு பகீரதனை
பின்தொடர்ந்தது.
*
* *
गगनाच्छङ्करशिरस्ततो
धरणिमागता |
व्यसर्पत जलम् तत्र तीव्र शब्द पुरस्कृतम् ||१७||
க3க3நாச்
ச2ங்கரஶிரஸ்
ததோ த4ரணிமாக3தா ||
வ்யஸர்பத ஜலம் தத்ர தீவ்ரஶப்3த3புரஸ்க்ருதம் ||
வ்யஸர்பத ஜலம் தத்ர தீவ்ரஶப்3த3புரஸ்க்ருதம் ||
Thus Ganga came from heavens onto Shankara's head and from
there onto the earth, and there on earth her waters advanced with a tumultuous
sound advancing them. { The River Ganga is also called as tripathagaa 'she
courses in three ways...' of which one kind of
thinking is that she flowed from Himalayas to heaven,
from heaven to Shiva's head and from there to earth. In the above context also,
she is said to have the three-way-flow, i.e., one is eastward flow, second
westward flow and the third is southward flow as led by Bhageeratha. The
westward river Sindhu is the Indus and the eastward Nalini, which is now called
as river Brahmaputra, while Ganga proper courses a little to south to move
towards the ocean.}
ராஜரிஷியான பகீரதன் தெய்வீக ஆற்றல்
கொண்ட ரதத்தில் ஏறி ,
வழிகாட்டிகொண்டு முன்னதாக சென்றான்.கங்கை மிகவும் கம்பீரமாக அவனை பின் தொடர்ந்து சென்றாள் .
ஆகாயத்திலிருந்து சங்கரன் தலைக்கு வந்த அவ , பின்னர் பூமிக்கு வந்தாள் . பேரிரை ச்சல் எழுப்பியவாறு வேகமாக அவள் பிரவாகித்து கொண்டு
இருந்தாள் .
*
* *
मत्स्य कच्छप संघैश्र्च शिंशुमार गणैस्तथा |
पतद्भिः पतितैश्र्चान्यैर्व्यरोचत् वसुंधरा ||१८||
மத்ஸ்யகச்ச3ப ஸங்கை4ஶ்ச ஶிம்ஶுமார க3ணைஸ்ததா2 |
பதத்3பி4: பதிதைஶ்சாந்யைர்
வ்யரோசத வஸுந்த4ரா
||
The earth then verily shone forth
with the shoals of fish, schools of tortoises, and scores of porpoises and
other aquatic beings that have already
fallen and that were still falling in step with the spates of Ganga.
மீன்கள், ஆமைகள், முதலைகள் கூட்டம் கூட்டமாக அதனுடன் விழுந்தன.
நீர்வாழ் மற்ற பிராணிகளும் கங்கையில் கலந்து விழுந்ததால், பூமி அழகு மிகுந்து காணத் தகுந்ததாயிற்று.
*
* *
ततो देवर्षिगन्धर्वायक्ष सिद्ध गणास्तथा |
व्यलोकयन्त ते तत्र गगनात् गाम् गताम् तदा ||१९||
ததோ தே3வர்ஷிக3ந்த4ர்வா யக்ஷ: ஸித்3த4க3ணாஸ்ததா2 |
வ்யலோகயந்த தே தத்ர க3க3நாத்3கா3ம்
க3தாம்
ததா3 ||
Later, they the Gods, sages,
gandharva-s, yaksha-s, and the assemblages of siddhas witnessed with curiosity
the swoop of Ganga from heaven to earth.
அப்போது தேவரிஷி-கந்தர்வ-யக்ஷ-ஸித்தர்கள் கூட்டமாக வந்து, ஆகாயத்திலிருந்து
வந்து பூமிக்கு சென்று விட்ட கங்கையை பார்த்தார்கள்.
*
* *
विमानै र्नगराकारै र्हयै र्गजवरैस्तथा|
पारिप्लवगतैश्चापि देवतास्तत्र विष्ठिताः||२०||
விமாநைர் நக3ராகாரைர் ஹயைர் க3ஜவரைஸ் ததா3|
பாரிப்லவக3தைஶ்சாபி தே3வதாஸ்தத்ர விஷ்டி2தா :||
At the very sight of plunging Ganga, some of
the gods with aircrafts that are like cities in their shape and size, and some
with horses that are prancing, and some with best elephants that are staggering,
entered the firmament at that place.
பட்டணம் போல் விசாலமான விமானங்களிலும், உத்தமமான குதிரை -
யானைகளிலும் வந்த அவர்கள் பேராச்சரியத்துடன் அங்கெ நின்று கொண்டார்கள்.
*
* *
ततद्भुततमम्
लोके गंगा पतनमुत्तमम्|
दिदृक्षवो देव गणाः समीयुरमितौजसः ||२१||
தமத்3பு4ததமம்
லோகே க3ங்கா3பதந முத்தமம் |
தி3த்3ருக்ஷவோ
தே3வக3ணா : ஸமீயுரமிதௌஜஸ :||
The gods whose animation was
unlimited, and who were anxious to see the plunge of Ganga, came together in
assemblages. The plunge was regarded a great marvel in the universe by a better
degree of her illimitable animation than that of gods who came to see.
இணையற்ற ஆற்றலையுடய தேவர்கள் கங்கை
பூமியில் விழுகின்ற அற்புதத்தை , காண்பர்கரிய
காட்சியைக் காண விரும்பி கூட்டம்கூட்டமாக வந்து குழுமினார்கள்
*
* *
संपतद्भिः सुर गणैस्तेषां चाभरणौजसा |
शतादित्यमिवाभाति
गगनम् गततोयदम् ||२२||
ஸம்பதத்3பி4: ஸுரக3ணைஸ் தேஷாம் சாப4ரணௌஜஸா |
ஶதாதி3த்யமிவாபா4தி க3க3நம் க3ததோயத3ம் ||
The glitter of the ornaments of
hosts of gods who were in stampede, made the cloudless sky to shine as though
it was lit with hundreds of suns.
கங்கையின் பாய்ச்சலை காண விரும்பி , மிகவும் வேகமாக வந்து
கொண்டிருந்த ஒளி மயமான தேகம் படைத்த தேவர்களாலும் , அவர்கள்
அணிந்து கொண்டிருந்த அணிகலன்களின் ஒளியினாலும், மேகங்கள்
இல்லாமல் வெட்ட வெளியாய் விளங்கிய ஆகாயம் , நூறு சூரிய
பிரகாசத்துடன் பேரொளி வீசியது.
*
* *
शिंशुमारोरगगणैर्
मीनैरपिच चंचलैः |
विद्युद्भिरिव विक्षिप्तै राकाशमभवत्तदा ||२३||
ஶிம்ஶுமாரோரகககணைர் மீநைரபி ச சஞ்சலை:
|
வித்3யுத்3
பி4ரிவ
விக்ஷிப்தை ராகாஶமப4வத்ததா3||
At that time, with the falling and
rising of scores of porpoises and reptiles, even with the wriggling fishes, the
sky became flashy as though flashes of lightning are strewn over it.
துள்ளி திளைத்தபடி வீழ்ந்து
கொண்டிருந்த முதலை-பாம்பு-மீன் கூட்டங்களால் கங்கை
நீர் வீழ்ச்சி, மின்னலின் ஒளிச்சிதறல்கள்களுடன் தோன்றும் ஆகாயம் போல்
விளங்கியது
*
* *
पाण्डुरैः सलिलोत्पीडैः कीर्यमाणैः सहस्रधा |
शारदाभ्रैरिवाक्रीणं गगनम् हंस संप्लवैः ||२४||
பாண்ட3ரை : ஸலிலோத்பீடை3: கீர்யமாணை : ஸஹஸ்ரதா4 |
ஶாரதா3ப்4ரைரிவாக்ரீணம் க3க3நம் ஹம்ஸ ஸம்ப்லவை : ||
Spattered innumerably with the
whitish froth from the splashes of Ganga, and stippled with the flights of
swans, the sky was as though overspread with silver-clouds of autumn.
ஆயிரம் துண்டுகளாக்கப்பட்ட வெண்மையான
நுரை பரவலாக விழுந்து கொண்டிருந்த காட்சி , சரத் கால
வெண்மேகங்களாலும்,
அன்னப் பறைவகளின் சஞ்சாரத்தாலும் விளங்கும் ஆகாயம்
போலிருந்தது
*
* *
क्वचित् द्रुततरम् याति कुटिलम् क्वचितायतम् |
विनतम् क्वचितुद्धूतम् क्वचित् याति शनैः शनैः ||२५||
सलिलेनैव
सलिलम् क्वचितभ्याहतम् पुनः |
मुहुरूर्ध्व
पथम् गत्वा पपात वसुधातलम् ||२६||
க்வசித்3 த்3ருததரம் யாதி குடிலம் க்வசிதா3யதம் |
விநதம் க்வசிது3த்3பூ4தம் க்வசித்3 யாதி ஶநை : ஶநை : ||
ஸலிலேநைவ ஸலிலம் க்வசித3ப்4யாஹதம்
புந: |
முஹூரூர்த்4வபத2ம் க3த்வா பபாத வஸுதா4 தலம் ||
முஹூரூர்த்4வபத2ம் க3த்வா பபாத வஸுதா4 தலம் ||
Somewhere Ganga was coursing
precipitately, elsewhere sinuously, somewhere else staightly, elsewhere
sloppily, somewhere gushingly, and somewhere else her cruise was leisurely
and tardily in uplands.Somewhere her water repeatedly
knocking against her own water was recurrently billowing upwards only to make
nosedive onto earth.
சில நேரங்களில் வேகமாகவும், சில இடங்களில் குறுகலாகவும் , மற்ற சில இடங்களில்
அகலமாகவும்,
சில சந்தர்பங்களில் கீழ் நோக்கி பாய்ந்தும், சில சந்தர்பங்களில் மேல் நோக்கி தாவியும், சில இடங்களில்
மிக மிக மெதுவாகவும் ,
சில நேரங்களில் தண்ணீரின் மேல் தண்ணீர் அடித்துக்கொண்டும் ,
அடிக்கடி மேலே மேலே சென்றும் ஒருவழியாக பூமியில் வீழ்ந்தது
*
* *
तच्छङ्कर
शिरो भ्रष्टम् भ्रष्टम् भूमि तले पुनः |
व्यरोचत तदा तोयम् निर्मलम् गतकल्मषम् ||२७||
தச்ச2ங்கரஶிரோப்4ரஷ்டம் ப்4ரஷ்டம் பூ4மிதலே புந : |
வ்யரோசத ததா3 தோயம் நிர்மலம் க3தகல்மஷம் ||
That impeccable and immaculate water
of Ganga then became outstanding as it had flounced down from heaven primarily
onto the head of Shankara, and therefrom it had coasted down onto the earth.
பரமேஸ்வரனின் திருமுடியிலிருந்து
வெளிப்பட்டு பூதலத்திற்கு வந்து சேர்ந்த அந்த தண்ணீர் , மாசற்றதாகவும் தெள்ளியதாகவும் கருதப்பட்டது
*
* *
तत्र
देवर्षिगन्धर्वा वसुधातल वासिनः|
भवाङ्गपतितं
तोयम् पवित्रम् इति पस्पृशुः || २८||
தத்ரர்ஷி தேவர்ஷி க3ண க3ந்த4ர்வா வஸுதா4தல வாஸிந :|
ப4வாங்க3பதிதம் தோயம் பவித்ரமிதி பஸ்ப்ருஶு : ||
Regarding that the water as holy as it
descended touching the body of Shiva, viz., the head of Shiva, the assemblages
of sages, gandharva-s, and those that were residents
on earth sipped that water at that place.
அப்போது பூவுலகில், அவ்விடத்தில் இருந்த
தேவரிஷிகளும் கந்தர்வர்களும்,
'பரமசிவன் உடலிலிருந்து
விழுந்த தண்ணீர் மிகவும் புனிதமானது’ என்பதால் அதில் நீராடினார்கள்
*
* *
शापात् प्रपतिता ये च गगनात् वसुधा तलम् |
कृत्वा
तत्राभिषेकम् ते बभूवुर्गत कल्मषाः ||२९||
ஶாபாத்ப்ரபதிதா யே
ச ககநாத் வஸுதாதலம் |
க்ருத்வா
தத்ராபிஷேகம் தே பபூவுர் க3தகல்மஷா : ||
Also those that have fallen from
heaven onto the surface of earth by some curse or the other, they too became
blemishless on taking bath in the water of Ganga.
சாபம் பெற்றதினால் விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்திற்கு
தள்ள பட்டவர்கள் (தேவ-கந்தர்வ-யக்ஷர் முதலானோர்) அந்த நீரில் நீராடி மாசுகள் நீங்க
பெற்றார்கள் .
* * *
धूतपापाः
पुनस्तेन तोयेनाथ सुभास्वता |
पुनराकाशमाविश्य स्वान्लोकान् प्रतिपेदिरे ||३०||
தூ4தபாபா: புநஸ்தேந க3ங்கா3தோயேந பாஸ்வதா
புநராகாஶமாவிஶ்ய
ஸ்வாம்லோகாந் ப்ரதிபேதி3ரே ||
When sins were washed away with the
hallowing water of Ganga, they again transited skyward and then obtained their
own empyrean worlds once again.
தூயதான கங்கையில்
மூழ்கி எழுந்த அவர்கள் பாவம் நீங்கியவர்களாக (சாப விமோசனம் பெற்று) ஆகாயமார்கமாக தத்தம் உலகங்களை சென்றடைந்தார்கள்
* * *
मुमुदे मुदितो लोकः तेन तोयेन सुभास्वता |
कृत अभिषेको गंगायाम् बभूव विगतक्लमः ||३१||
முமுதே3 முதி3தோ லோகஸ் தேந தோயேந ஸுபா4ஸ்வதா |
க்ருதாபி4ஷேகோ க3ங்கா3யாம் ப3பூ4வ விக3தக்லம : ||
க்ருதாபி4ஷேகோ க3ங்கா3யாம் ப3பூ4வ விக3தக்லம : ||
With her splendorous water people were blissful, and on
taking dip-baths in Ganga they were totally removed of the strains of their
sins, and they lived blissfully ever after.
தெளிவான ஒளிவீசும்
அந்த தண்ணீரால் உலகம் மகிழ்ந்து களித்தது. மக்கள் கங்கையில் மூழ்கி நீராடி பாவம்
நீங்கப் பெற்றார்கள்.
* * *
भगीरथो राजर्षिर्दिव्यम् स्यंदनमास्थितः |
प्रायादग्रे महातेजास्तम् गंगा पृष्ठतोन्वगात् ||३२||
ப4கீ3ர தோ2ऽபி ராஜர்ஷிர் தி3வ்யம் ஸ்யந்த3நமாஸ்தி2த :|
ப்ராயாத3க்3ரே மஹாதேஜாஸ் தம் க3ங்கா3 ப்ருஷ்ட2தோऽந்வகா3த் ||
In this way, the great-resplendent and kingly sage
Bhageeratha sitting in a divine chariot continuously moved ahead and Ganga
continually followed him. {This verse is almost similar to the verse No. 14
above. But here, the continuous actions of both the leader and the led are
implied with ellipses - 'in this way', and 'continuously.'}
பராக்ரமசாலியான ராஜரிஷி பகீரதன் ,தெய்வீகமான ஒரு தேரில் முன்னே செல்ல , அவனுக்கு
பின்னால் கங்கை தொடர்ந்து சென்றது
*
* *
देवाः
सर्षि गणाः सर्वे दैत्य दानव राक्षसाः |
गन्धर्व यक्ष प्रवराः स किंनर महोरगाः ||३३||
सर्वाश्चाप्सरसो
राम भगीरथरथानुगाः|
गङ्गामन्वगमन्
प्रीताः सर्वे जलचरास्चये |||३४||
தே3வா: ஸர்ஷிக3ணா: ஸர்வே தை3த்ய தா3நவராஷஸா : |
க3ந்த4ர்வயக்ஷப்ரவரா: ஸகிந்நர மஹோரகா3: ||
ஸர்வாஶ்சாப்ஸரஸோ ராம ப4கீ3ரத2 ரதா2நுகா3: |
க3ங்கா3மந் வக3மந் ப்ரீதா: ஸர்வே ஜலசராஶ்ச யே
||
Oh, Rama, all of the gods along with
the assemblages of sages, ogres, monsters, demons,
and even great reptiles with kinnara-s, and gandharva-s with best yaksha-s, and
even serpents and apsara-s, delightfully followed Ganga who was following the chariot
of Bhageeratha. So did all of the aquatic beings .
தேவ-முனி-அசுர-கந்தர்வ-யக்ஷ-கின்னர-அப்சரக்
கூட்டங்களும் ,எல்லா நீர்வாழி பிராணிகளும் பகீரதனுடைய ரதத்தின் பின்னால் சென்று கொண்டிருக்கும் கங்கையை, மனம் நிறைந்தவர்களாக பின் தொடர்ந்து சென்றார்கள்.
*
* *
यतो भगीरथो राजा ततो गंगा यशस्विनी |
जगाम सरिताम् श्रेष्ठा सर्व पाप प्रणाशिनी ||३५||
யதோ ப4கீ3ரதோ2 ராஜா ததோ க3ங்கா3 யஷஶ்விநீ |
ஜகா3ம ஸரிதாம் ஶ்ரேஷ்டா2 ஸர்வபாப ப்ரணாஶிநீ ||
In whichever direction king
Bhageeratha advanced, that glorious River Ganga, the prominent river among all
the rivers and the complete obliterator of sins also followed him in that
direction.
எங்கெல்லாம் மன்னன் பகீரதன் சென்றானோ
, அங்கெல்லாம் புகழ்பெற்றவளும் , ஆறுகளில்
முதன்மையானவளும், எல்லாப் பாவங்களையும்
அழிப்பவளான கங்கை சென்றாள்
*
* *
ततो हि यजमानस्य जह्नोरद्भुत कर्मणः |
गंगा संप्लावयामास यज्ञ वाटम् महात्मनः ||३६||
ததோ ஹி யஜமாநஸ்ய
ஜஹ்நோரத்3பு4தகர்மண : |
க3ங்கா3 ஸம்ப்லாவயாமாஸ யக்ஞவாடம் மஹாத்மந : ||
While in flow she started to completely
inundate the field of Vedic-ritual belonging to the great-souled sage Jahnu,
who was of marvellous deeds and who was then officiating an ongoing
Vedic-ritual.
வழியில் ஜன்ஹு ரிஷி யாகம் செய்த இடத்தில பரவினாள் . யாக பதார்த்தங்களை
அடித்துக்கொண்டு போயிற்று.
*
* *
तस्या वलेपनम् ज्ञात्वा कृद्धो जह्नुश्च राघव |
अपिबच्च जलम् सर्वम् गंगाया: परमाद्भुतम् ||३८||
தஸ்யா வலேபநம்
ஞாத்வா க்ருத்3தோ3 ஜஹ்னுச்ச ராக4வ|
அபிப3ச்ச ஜலம் ஸர்வம் க3ங்கா3யா: பரமாத்3பு4தம் ||
But on knowing her hubris, oh,
Raghava, that sage Jahnu has become irritated and causing an extreme marvel he drank all the water of Ganga.
ராகவா! யாகதீக்ஷயிலிருந்த அவர்
அவளுடைய செறுக்கைத் தெரிந்து கொண்டு கங்கையின் நீர்ப்பெருக்கு முழுவதையும்
குடித்து விட்டார். அடடா! என்ன அற்புதம் !
*
* *
ततो देवाः स गंधर्वा ऋषयश्च सुविस्मिताः |
पूजयन्ति महात्मानम् जह्नुम् पुरुष सत्तमम् ||३९||
गंगाम् चापि नयन्ति स्म दुहितृत्वे महात्मनः |
ததோ தே3வா: ஸக3ந்த4ர்வா ருஷயஶ்ச ஸுவிஸ்மிதா: |
பூஜயந்தி
மஹாத்மாநம் ஜஹ்நும் புருஷஸத்தமம் |
க3ங்கா3ம் சாபிநயந்தி ஸ்ம து3ஹித்ருத்வே மஹாத்மந: ||
Thereupon, the gods along with
gandharva-s and sages at that extremely marvellous feat of Sage Jahnu were
highly astounded, and they then started to worship that ablest human and
great-souled sage Jahnu, and even deigned for the daughterhood of Ganga to that
high-souled sage Jahnu.
அப்போது அதை கண்டு தேவ-கந்தர்வ-முனிவர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்து, புருஷ சிரேஷ்டரும்,
தயவு நிறைந்தவருமான ஜன்ஹுவை பிரார்த்தித்தார்கள்
*
* *
ततस्तुष्टो महातेजाः श्रोत्राभ्यामसृजत्
पुन: ||४०||
तस्मात् जह्नुसुता गङ्गा प्रोच्यते जाह्नवीति च |
ததஸ்துஷ்டோ மஹாதேஜா:
ஶ்ரோத்ராப்4யாமஸ்ருஜத்புந: ||
தஸ்மாஜ் ஜஹ்நுஸுதா
க3ங்கா3 ப்ரோச்யதே ஜாஹ்நவீதி ச |
That greatly radiant and godly sage
Jahnu was then delighted and released Ganga from both of his ears. Therefore
Ganga became the daughter of sage Jahnu, and she is also renowned as Jahnavi,
after the name of that sage.
'கங்கை உங்கள் மகளை போலை' என்று நயந்து
கூறினார்கள். அதனால் மனம் மகிழ்ந்த அவர் தன செவிகள் வாயிலாக கங்கையை வெளிப்படுத்தினார்.
அது முதற்கொண்டு ஜன்ஹுவின் மகள் எனும் பொருள்படும் ஜான்ஹவி
என்று கங்கை அழைகப்படவானாள் .
जगाम च पुनः गङ्गा भगीरथ रथानुगा ||४१||
सागरम् चापि संप्राप्ता सा सरित् प्रवरा तदा |
रसातलमुपागच्छत्
सिद्ध्यर्थम् तस्य कर्मणः ||४२॥
ஜகா3ம ச புநர்க3ங்கா3 ப4கீ3ரத3 ரதா3நுகா3 ||
ஸாக3ரம் சாபி ஸம்ப்ராப்தா ஸா ஸரித்ப்ரவரா ததா3 |
ரஸாதலமுபாக3ச்ச2த் ஸித்3த்4யர்த2ம் தஸ்ய கர்மண : ||
Ganga again proceeded moving behind the chariot of
Bhageeratha and reached the ocean, therefrom she went to netherworlds, once dug
by the sons of Sagara, only to accomplish the mission of Bhageeratha, namely
drenching the ashes of Sagara's sons.
மீண்டும் பகீரதனின் ரதத்தை
தொடர்ந்தது கங்கை. ஆறுகளின் தலைமையான கங்கை,கடல் எல்லை வரை சென்று, பகீரதன்
எடுத்துக்கொண்ட முயற்சி நிறைவேறு வதற்காக பாதாளம் சென்றாள்
*
* *
भगीरथोऽपि राजर्षिगङ्गामादाय यत्नतः |
पितमहान्भस्मत्कृतानपश्यद्दीनचेतन : ||४३॥
पितमहान्भस्मत्कृतानपश्यद्दीनचेतन : ||४३॥
ப4கீ3ரதோऽ2பி ராஜர்ஷிர் க3ங்கா3மாதா3ய யத் நத: |
பிதாமஹாந் ப4ஸ்மக்ருதாநபஶ்யத்3தீ3நசேதந: ||
Even kingly-sage Bhageeratha making
every effort ushered Ganga to netherworld, but on seeing his grandparents
rendered to ashes he has became doleful.
ராஜரிஷி பகீரதன் மிகவும் முயன்று
கங்கையை கொண்டு வந்து,
சாம்பாலாகக் கிடந்த பாட்டனார்களை மிகவும் துயரத்துடன்
பார்த்தான். (இவர்களுக்கு இத்தனை காலம் நல்ல கதி கிடைக்கவில்லையே என்று துயரப்பட்டான்)
*
* *
अथ तत् भस्मनाम् राशिम् गङ्गा सलिलमुत्तमम् |
प्लावद्भूत पाप्मानः स्वर्गम् प्राप्ता रघूत्तम ||४४||
அத2 தத்3ப4ஸ்மநாம் ராஶிம் க3ங்கா3ஸலில முத்தமம் |
ப்லாவயத்3பூத பாப்மாந: ஸ்வர்க3ம் ப்ராப்தா ரகூ4த்தம ||
Oh, Rama, the best of Raghu's
dynasty, then Ganga inundated that mound of ashes of Sagara's sixty-thousand
sons, by which those souls obtained heaven, while the sins of souls are
cleansed with the water of Ganga." Thus Vishvamitra continued his narration.
சாம்பல் குவியல் மேல் கங்கை நீரை
பொழிந்தான். பாவங்கள் நீங்கப்பெற்ற அவர்கள் ஸ்வர்க்கத்தை அடைந்தார்கள்.
इति वाल्मीकि रामायणे आदि काव्ये बाल काण्डे त्रि
चत्वारिंशः सर्गः
இத்யார்ஷே ஸ்ரீமத்3 ராமாயணே வால்மீகியே
ஆதி3 காவ்யே பா3லகாண்டே3 த்ரிசத்வாரிம்ஶ: ஸர்க3||
Thus, this is the 43rd chapter in
Bala Kanda of Valmiki Ramayana, the First Epic poem of India.
ஸ்ரீமத் வால்மீகி
ராமாயணம் பாலகாண்டத்தில் நாற்பத்தி மூன்றாவது ஸர்க்கம் முற்றிற்று||
* * *
Bala Kanda - Sarga 44
Introduction
Brahma
commends Bhageeratha in bringing Ganga onto earth which none of his ancestors
could do. Brahma blesses Ganga to be the daughter of Bhageeratha. Brahma
advises him to offer water-oblations to his manes with the sanctified waters of
Ganga.
*
* *
பால காண்டம்
ஸர்க்கம் 44
அப்பொழுது ஸகல லோகங்களுக்கும் பிரபுவான பிரஹ்மா அங்கே வந்து ,"பகீரத!புருஷ சிரேஷ்டா ! ஸகரனுடைய அருபதனாயிரம் புத்திரர்களையும்
கரையெற்றினாய் . அவர்கள் ஸ்வர்கத்தில் தேவர்களை போல் விளங்குகிறார்கள்.
ஸமுத்ரஜலமுள்ளவறையில் ஸ்வர்க்கத்தில் ஆனந்தமாய் வஸிப்பார்கள். இந்த கங்கை உனக்கு
மூத்த பெண்ணாகட்டும். "பாகீரதி" என்ற பெயருடன் உலகில் பிரஸித்தியடைவாள்
.ஸ்வர்க்கம் பூமி பாதாளம் என்ற மூவிடங்கள் சென்றதால் 'திரிபதகா'வென்றும் , உன்னால் கொண்டு வரப்பட்டதால் 'பாகீரதி' என்றும் இவளுக்கு பெயர் வந்தது. உன்
முன்னோர்களுக்கு இதில் தர்ப்பணம் செய்து அவர்களை கரையேற்றி உன் பிரதிக்ஞையை முடி..
மஹா தர்மசீலனான ஸகரனும்
அபார தேஜஸுள்ள அம்சுமானும் , ராஜசிரேஷ்டனும் உத்தம குணவானும் மகரிஷிகளை போன்ற தேஜஸ்ஸுள்ளவனும் ,
தபஸ்ஸில் என்னை போன்றவனுமான திலீபனும் இந்த கங்கையை பூமிக்கு
தருவிக்க எவ்வளோவோ முயன்றார்கள். ஆனால் இந்த புண்ணிய ஜலத்தில் தர்ப்பணம் செய்து
ஸகர புத்திரர்களை கரையேற்றுவதற்க்கான பிரதிக்ஞையை நிறை வேற்ற முடியவில்லை. அந்த அஸாத்தியமான
காரியத்தை நீ செய்தாய். லோகத்தில் அழிவற்ற கீர்த்தியடைந்தாய். ஸ்வர்க்கதிலிருந்து
கங்கையை பூமிக்கு கொண்டு வந்தபடியால் தர்மத்திற்கு இருப்பிடமானாய் . மற்ற நதிகளை
போலின்றி எப்பொழுதும் ஸ்நானம் செய்யக்கூடிய இந்த நதியில் நீயும் ஸ்நானம் செய்து
சுத்தனாய் விசேஷ புண்ணியத்தை அடை . உன் முன்னோர்களுக்கு
இதில் தர்ப்பணம் செய். உனக்கும் ஸகல மங்களங்களும் உண்டாகட்டும். நான்
ஸத்யலோகதிர்க்கு போகிறேன். நீயும் பூலோகத்திற்கு போ." என்று
அனுக்ரஹித்து தன உலகிற்கு சென்றார்.
பகீரதர் விதிப்படி கங்கையின் புண்ணிய ஜலத்தால் ஸகர புத்திரர்களுக்கு
தர்ப்பணம் மற்றும் ஸகல உத்திரக்கிரியைகளை செய்து தன பிரதிஞ்ஞை நிறைவேறியதால்
அளவற்ற ஸந்தொஷமடைந்து அயொத்யைக்கு வந்து வெகு காலம் அரசாண்டார்.அவருடைய காலத்தில்
ஜனங்கள் நோயின்றி, மனக்கவலையின்றி, காப்பாற்றப்பட்டு
ஸகல ஸௌகியங்களுடன் பொருந்தி இருந்தார்கள்.
ராம! கங்கையின் வரலாற்றை உனக்கு விஸ்தாரமாக சொன்னேன்.உனக்கு ஸகல
மங்கலங்களும் உண்டாகட்டும். ஸந்தியா காலம் கிட்டினதால் இங்கேயே
நிறுத்துவோம். கங்கை பூமிக்கு வந்த இந்த சரித்திரத்தை கேட்பவன் ஸகல இஷ்டங்களையும்
அடைகிறான்; ஸமஸ்த பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்;ஆயுளும் கீர்த்தியும் வளர்கின்றன. புத்திர பௌத்திரர்களுடன் இவ்வுலகத்தில்
ஸந்தொஷமாய் வஸித்து இறந்த பின்பு ஸ்வர்க்கத்தை அடைகிறான்; பிராம்மண க்ஷத்ரிய வைஷ்யர்களில் இதை பிறருக்கு சொல்கிறவரின் பித்ருக்களும்
தேவதைகளும் மிகுந்த பிரீதியடைகின்றார்கள் ," என்றார்.
*
* *
स गत्वा सागरम् राजा गंगयानुगतस्तदा |
प्रविवेश तलम् भूमेर्यत्र ते भस्मसात् कृताः ||१||
ஸ க3த்வா ஸாக3ரம்
ராஜா க3ங்க3யாநுக3ஸ்ததா4 |
ப்ரவிவேஶ தலம் பூ4மேர் யத்ர தே ப4ஸ்மஸாத்க்ரு தா : ||
‘King Bhageeratha followed by Ganga
had gone to the ocean-like ditch which was dredged up by the sons of Sagara,
and entered the subterranean of earth where the sons of Sagara were rendered ashes.’ Thus Vishvamitra continued his
narration about the Descent of Ganga.
கங்கை பின்தொடர கடற்கரையை அடைந்த
மன்னன் பகீரதன், பூமிக்கு கீழே ரஸாதலத்தில், அவனுடைய
முன்னோர்கள் சாம்பலாக்கப்பட்ட இடத்தை அடைந்தான்.
*
* *
भस्मन्यथाप्लुते राम गङ्गायाः सलिलेन वै |
सर्व लोक प्रभुः ब्रह्मा राजानम् इदम् अब्रवीत् ||२||
ப4ஸ்மந்யதா2ப்லுதே ராம க3ங்கா3யா
: ஸலிலேந வை |
ஸர்வலோகப்ரபு4ர் ப்3ரஹ்மா
ராஜாநமித3மப்3ரவீத் ||
While the waters of Ganga were
inundating those ashes, oh, Rama, then Brahma, the Lord of all worlds, spoke this to King Bhageeratha.
ராமா ! கங்கை நீரினால் சாம்பல் நனைக்கப்பட்ட அந்த நேரத்தில் எல்லா உலகங்களுக்கும்
தலைவரான ப்ரஹ்மா அங்கு தோன்றி அரசனை பார்த்து கூறினார் -
*
* *
तारिता नरशार्दूल दिवम् याताश्च देववत् |
षष्टिः पुत्रसहस्राणि सगरस्य महात्मनः ||३||
தாரிதா நரஶார்தூ3ல தி3வம்
யாதாஶ்ச தே3வவத்
|
ஷஷ்டி: புத்ரஸஹஸ்ராணி ஸக3ரஸ்ய மகாத்மந :||
'Oh,
tigerly-man Bhageeratha, the sixty thousands sons of great souled Sagara have
crossed over the sea of mortality, and on par with the gods they have also transited to
heaven.’
“ஆண்சிங்கமே! மகாத்மாவான
ஸகரனின் அறுபதிநாயிரம் புத்ரர்களும் கரையேற்றப்பட்டு , தேவர்களை போல் விண்ணுலகம் அடைந்து விட்டார்கள்" "
*
* *
सागरस्य जलम् लोके यावत् स्थास्यति पार्थिव |
सगरस्यात्मजास्तावत्स्वर्गे स्थास्यन्ति देववत् ||४||
ஸாக3ரஸ்ய ஜலம் லோகே யாவத் ஸ்தா2ஸ்யதி பார்தி2வ |
ஸக3ரஸ்யாத்மஜாதாவத் ஸ்வர்கே ஸ்தா2ஸ்யந்தி தே3வவத் ||
As long as the water of the ocean
abides in the world, the sons of Sagara will abide in heaven like gods.
"மன்னனே! சமுத்திரத்தில் நீர் உள்ள வரையில் ஸகர குமாரர்கள், தேவர்களை போல தேவலோகத்தில் சௌக்கியமாக இருப்பார்கள் "
*
* *
इयम् च दुहिता ज्येष्ठा तव गंगा भविष्यति |
त्वत् कृतेन च नाम्नाथ लोके स्थास्यति विश्रुता ||५||
இயம் ச து3ஹிதா
ஜ்யேஷ்டா2 தவ
க3ங்கா3 ப4விஷ்யதி
|
த்வத்க்ருதேந ச நாம்நாத2 லோகே ஸ்தா2ஸ்யதி விஶ்ருதா ||
'This Ganga will
become your eldest daughter and hereafter she will remain renowned in the world
with the name associated with your deed of bringing her onto earth.
"கங்கா தேவியும்
உனக்கு ஒரு மூத்த மகள் போல் ஆகிறாள். உன்னுடைய பெயரை ஒட்டி "பாகீரதி"
என்ற பெயருடன் உலகில் கீர்த்தியுடன் விளங்க போகிறாள்"
*
* *
गंगा त्रिपथगा नाम दिव्या भागीरथीति च |
त्रीन् पथो भावयन्तीति ततस्त्रिपथगा स्मृता ||६||
க3ங்கா3 த்ரிபத2கா3 நாம
தி3வ்யா
பா4கீ3ரதீ2தி
ச |
த்ரீந் பதோ2 பா4வயந்தீதி
ததஸ்த்ரிபத2கா3 ஸ்ம்ருதா ||
'Henceforth heavenly Ganga will be renowned as 'Tripathagaa'
and 'Bhaageerathi,' as well, and as this river is sanctifying three worlds, namely, svarga,
bhuu, paataala loka-s, 'heaven, earth and netherworld' she will be remembered
as the traveller on triple path.
பாகீரதி'
என்பதுடன் தெய்வீக நதியான கங்கை, 'த்ரிபதகா'
என்ற பெயரையும் பெறுகிறாள். மூன்று வழிகளில் ( உலகங்களில்) பாய்ந்து புனிதப்படுதுகிறாள் என்பதால் 'த்ரிபதகா'
என்ற சிறப்பு பெயரை அடைகிறாள்.
*
* *
पितामहानाम् सर्वेषाम् त्वम्त्र मनुजाधिप |
कुरुष्व सलिलम् राजन् प्रतिज्ञाम् अपवर्जय ||७||
பிதாமஹாநாம் ஸர்வேஷாம் த்வமத்ர மநுஜாதி4ப |
குருஷ்வ ஸலிலம் ராஜந் ப்ரதிக்ஞாமபவர்ஜய||
You may now offer water-oblations to all of your forefathers
in the waters of Ganga, oh, king, the lord of people, thus you may fulfil and
do away with the pledge of your requiescat.
"அரசனே! உன்னுடைய பாட்டனார்கள்
அனைவருக்கும் இங்கே நீர்க்கடன் செய்து
பிரக்ஞையை நிறைவேற்று ".
* * *
पूर्वकेण हि ते राजन् तेन अतियशसा तदा |
धर्मिणाम् प्रवरेणापि नैष प्राप्तो मनोरथः ||८||
பூர்வகேண ஹி தே ராஜந் தேந
அதியஶஸா ததா3 |
த4ர்மிணாம் ப்ரவரேணாபி நைஷ ப்ராப்தோ மநோரத2 :||
Your ancestor Sagara is a highly glorious and best one among
righteous persons, oh, king, even then he could not achieve this aspiration of
alighting Ganga in his lifetime, but you have achieved it.
உன்னுடைய தந்தை முதலிய முன்னோர்கள் மிகவும் புகழ்பெற்றவர்கள், அறநெறியாளர்கள். மேன்மையானவர்கள. என்றாலும் அவர்கள் மனோரதம் நிறைவேறவில்லை (கங்கையை கொண்டு வர முடியவில்லை).
*
* *
तथैव अंशुमता तात लोकेप्रतिम तेजसा |
गंगाम् प्रार्थयता नेतुम् प्रतिज्ञा नापवर्जिता ||९||
गंगाम् प्रार्थयता नेतुम् प्रतिज्ञा नापवर्जिता ||९||
ததை2வ அம்ஶுமதா தாத லோகேऽப்ரதிம தேஜஸா |
க3ங்கா3ம்
ப்ரார்த2யதா
நேதும் ப்ரதிக்ஞா நாபவர்ஜிதா ||
‘Like that, your grandfather Amshuman, who was unequalled in
his resplendence in this world and who had been praying for the descent of
Ganga, but could not dispense with this vow ‘
அம்சுமான்,
உலகில் நிகரற்ற பராக்கிரமம் படைத்தவன். ராஜரிஷி ,நற்குணங்கள் நிறைந்தவன். மாமுனிவர்களை போன்ற ஆற்றலுடையவன். தவத்தில் எனக்கு ஈடானவன். க்ஷத்ரிய தருமத்தை கைவிடாது
கடைபிடித்தவன் (இவ்வளவு சிறப்புகளை பெற்ற அவன்) கங்கையை கொண்டு வருவதாகச் சபதம் செய்தும், அதை நிறைவேற்றமுடியவில்லை
*
* *
राजर्षिणा गुणवता महर्षिसमतेजसा |
मत्तुल्य तपसा चैव क्षत्रधर्मे स्थितेन च ||१०||
दिलीपेन महाभाग तव पित्रातितेजसा |
पुनर्न शकिता नेतुम् गंगाम् प्रार्थयतानघ ||११||
ராஜர்ஷிணா கு3ணவதா மஹர்ஷிஸமதேஜஸா |
மத்துல்யதபஸா சைவ க்ஷத்த்ரத4ர்மே ஸ்தி2தேந ச ||
தி3லீபேந மஹாபா4க3 தவ
பித்ராதி தேஜஸா |
புநர்ந ஶகிதா நேதும் க3ங்கா3ம்
ப்ரார்த2யதாநக4 ||
‘Oh, impeccable Bhageeratha, even by the kingly-sage Dileepa
whose resplendence is kindred to great sages, who was equal to me in his
ascesis, who abided by the observances
of ruling Kshatriya class, even by such a highly fortunate and highly
resplendent father of yours it was impossible to bring Ganga in his turn, even
though he had been supplicating for the descent of Ganga throughout his lifetime.
‘
"குற்றமற்றவனே! உன்னுடைய தந்தையான திலீபன்
பேராற்றலுடையவன். அவன், மறுபடியும் முயன்றும்கூட கங்கையை கொண்டு வர முடியவில்லை"
*
* *
सा त्वया समतिक्रान्ता प्रतिज्ञा पुरुषर्षभ |
प्राप्तोसि परमम् लोके यशः परमसंमतम् ||१२||
ஸா த்வயா ஸமதிக்ராந்தா ப்ரதிக்ஞா புருஷஷர்ப4 |
ப்ராப்தோऽஸி பரமம் லோகே யஶ: பரமஸம்மதம் ||
But, you have accomplished that pledge, Oh, the best one
among men! And in the world you have
achieved highest renown which is highly adorable by all.
(நெடுங்கால முயற்சிக்கு பின்பும் நிறைவேற்றபடாமலிருந்த) அந்த பிரதிக்ஞை உன்னால்
நிறைவேற்றப்பட்டுள்ளது (இந்த அரிய செயலினால்) இவ்வுலகத்தில் மகோன்னதமான கீர்த்தியை அடைந்திருக்கிறாய்.
*
* *
तत्च गंगावतरणम् त्वया कृतमरिन्दम |
अनेन च भवान् प्राप्तो धर्मस्यायतनम् महत् ||१३||
தத்ச் க3ங்கா3வதாரணம்
த்வயா க்ருதமரிந்த3ம
|
அநேந ச ப4வாந் ப்ராப்தோ த4ர்மஸ்யாயதநம் மஹத் ||
" 'That 'Descent of Ganga' is perfected by you, oh,
enemy-represser, and by this you have acquired a genuine basis for righteousness
in this world, and thereby a base for yourself
in my world, namely abode of Brahma.
"எதிரிகளை
அடக்குபவனே! கங்கையை கீழே இறக்கி கொண்டு வந்த செயற்கரிய செயலினால், தருமத்திற்கு இருப்பிடமான உத்தமலலோகங்களையும் அடைய போகிறாய்!"
*
* *
प्लावयस्व त्वमात्मानम् नरोत्तम सदोचिते|
सलिले पुरुषव्याघ्र शुचिः पुण्यफलो भव ||१४||
ப்லாவயஸ்வ த்வமாத்மாநம் நரோத்தம ஸதோ3சிதே |
ஸலிலே புருஷவ்யாக்4ர ஶுசி : புண்யப2லோ ப4வ ||
'Oh,
phenomenal one, you may always take dip-baths in the holy water of Ganga and
oh, persona grata, thereby get purified of sins and thus let your merit be
fructified. ‘
"மனிதருள் மாணிக்கமே! எந்த காலத்திலும் நீராடுவதற்கு உரியதான இந்த புனித நீரில் நீயும் மூழ்கி
நீராடு.
அதனால் தூய்மை அடைந்து
புண்ணியப் பயன்களை அடைவாய்"
*
* *
पितामहानाम् सर्वेषाम् कुरुष्व सलिलक्रियाम् |
स्वस्ति तेस्तु गमिष्यामि स्वम् लोकम् गंयताम् नृप ||१५||
பிதாமஹாநாம் ஸர்வேஷாம் குருஷ்வ
ஸலிலக்ரியாம் |
ஸ்வஸ்தி தேऽஸ்து க3மிஷ்யாமி ஸ்வம் லோகம் க3ம்யதாம் ந்ருப|
'You may now perform water-oblations to your forefathers
with the water of Ganga, let there be wellbeing to you, and oh, king, here I go
to my abode and you too may depart to yours.' Thus Brahma said to Bhageeratha.
“பாட்டனார்கள் எல்லோருக்கும் தர்ப்பணம் செய். உனக்கு மங்களம் உண்டாகட்டும். நான் சத்தியலோகத்திற்கு செல்கிறேன். நீ உன் நகரத்திற்கு செல்வாய். "
*
* *
इत्येवमुक्त्वा देवेशः सर्वलोक पितामहः |
यथागतम् तथागच्छत् देव लोकम् महायशाः ||१६||
இத்யேவமுக்த்வா தே3வேஶ: ஸர்வலோகபிதாமஹ :|
யதா2க3தம்
ததா2க3ச்ச2த்3 தே3வலோகம்
மகாயஶா:||
Upon saying this , Brahma - the forefather of all the worlds
and the great glorious Lord of all gods, went back to his empyrean world .
தேவர்களுக்கு தலைவரும், அனைத்துலக பிதமஹரான
ப்ரஹ்மா இவ்வாறு கூறிவிட்டு தான் வந்த வழியே தேவலோகத்திற்கு திரும்பி
சென்றார்.
*
* *
भगीरथोऽपि राजर्षिः कृत्वा सलिलमुत्तमम् |
यथाक्रमम् यथान्यायम् सागराणाम् महायशाः ||१७||
कृतोदकः शुची राजा स्वपुरम् प्रविवेश ह |
समृद्धार्थो नरश्रेष्ठ स्वराज्यम् प्रशशास ह ||१८||
பகீரதோऽபி ராஜர்ஷி : க்ருத்வா ஸலிலமுத்தமம் |
யதா2க்ரமம் யதா2ந்யாயம் ஸாக3ராணாம் மஹாயஶா: ||
க்ருதோத3க: ஶுசீ ராஜ ஸ்வபுரம் ப்ரவிவேஶ ஹ |
ஸம்ருத்3தா4ர்தோ2 நரஶ்ரேஷ்ட2 ஸ்வராஜ்யம் ப்ரஶஶாஸ ஹ ||
On according those best water-oblations that endow superior
realms to the souls of sons of Sagara, according to precedency and the
rationale of scriptures, and even on offering water-oblations to other manes
that kingly-sage and greatly renowned Bhageeratha was sanctified, and only then
did the king re-enter his own city,
indeed when his purpose was completely achieved, and oh, outstanding man Rama,
thus that king Bhageeratha ruled his kingdom well.
மன்னராயினும் முனிவர் போன்றிருந்த
பகீரதனும் விதிக்கப்பட்ட கர்மாவான நீர்கடனை பெரும்புகழ் கொண்ட ஸகர குமாரர்களுக்கு
உரிய முறையில் வரிசையாக செலுத்தினான்.
தர்ப்பணம் செய்து தன பித்ரு
கடன்களிருந்து விடுபட்டு தூய்மையடைந்த மன்னன் தன பட்டணத்தில் பிரவேசித்தான்.
இவ்வாறு தன எண்ணம் ஈடேறப் பெற்றவனாக தன் நாட்டில் நல்லாட்சி செய்தான்.
*
* *
प्रमुमोद च लोकस्तं नृपमासाद्य राघव |
नष्टशोकः समृद्धार्थो बभूव विगतज्वरः ||१९||
ப்ருமுமோத3 ச லோகஸ்தம் ந்ருபமாஸாத்ய ராக4வ |
நஷ்டஶோக: ஸம்ருத்3தா4ர்தோ2 ப3பூ4வ விக3தஜ்வர :||
On regaining him as their King, the subjects of the kingdom are overjoyed, and
oh, Raghava! King Bhageeratha too was relieved of his febrility as his purpose
was achieved and he was happy and devoid of a haunting grief of getting Ganga
to earth.
"ராகவனே! தங்கள் மன்னனை திரும்பவும் பெற்ற
மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களுடைய சோகம் அழிந்தது; எண்ணம் கைகூடியது; கவலை நீங்கியது."
*
* *
एष ते राम गंगाया विस्तरोऽभिहितो मया |
स्वस्ति प्राप्नुहि भद्रम् ते संध्या कालो अतिवर्तते ||२०||
ஏஷ தே ராம் க3ங்கா3ய விஸ்தரோऽபி4ஹிதோ மயா |
ஸ்வஸ்தி ப்ராப்நுஹி ப4த்3ரம் தே ஸந்த்4யாகாலோऽதிவர்ததே
||
"Oh, Rama, thus I have described you the holy 'The Decent of Ganga' in detail, thus you be blest
and prosperous, and as the visceral time is elapsing no more questions from you
for now, and let us meditate on Gayatri. But listen to the fruits of listening
the legend of Gangaavataranam, 'The Descent of Ganga'
" ராமா!
'கங்காவதரணம்' எனும் கங்கையின் வரலாற்றை விரிவாக உனக்கு சொன்னேன். நீ வாழ்க. ஸ ந்தியா
காலம் கொண்டிருக்கிறது. உரிய காலத்தில் காயத்ரி வழிபாடுகள் நிறைவேற்ற வேண்டுமல்லவா?”
*
* *
धन्यम् यशस्यमायुष्यम् पुत्र्यम् स्वर्ग्यमतीव च |
यः श्रावयति विप्रेषु क्षत्रियेष्वितरेषु च ||२१||
प्रीयन्ते
पितरस्तस्य प्रीयन्ते दैवतानि च |
தந்யம் யஶஸ்யமாயுஷ்யம் புத்ர்யம் ஸ்வர்க்3யமதீவ ச |
ய: ஶ்ராவயதி விப்ரேஷு க்ஷத்ரியேஷ்விதரேஷு
ச ||
ப்ரீயந்தே பிதரஸ்தஸ்ய ப்ரீயந்தே தை3வதாநி ச ||
‘This legend is conducive to achieve prosperity, fame, longevity,
progeny and even heaven, and he who narrates this legend to others, whether he
is from Brahmans or from Kshatriya-s, or for that matter from any other class,
his manes will be satisfied, and gods too will be gladdened. ‘
இந்த வரலாறு பொருள்,
புகழ், நீண்ட ஆயுள்,
மழலை செல்வம்,
ஸ்வர்க்கம் ஆகியவற்றை வழங்க கூடியது.
அந்தணர் , க்ஷத்ரியர், மற்றும்
அனைவருக்கும் ,
எவர் இந்த கதையை சொல்கிறாரோ, அவருடைய பித்ருக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்; தேவர்களும் பிரீதி அடைகின்றன.
*
* *
इदमाख्यानमव्यग्रो गङ्गावतरणम् शुभम् || २२||
यः श्रुणोति च काकुत्स्थ सर्वान् कामानवाप्नुयात् |
सर्वे पापाः प्रणश्यन्ति आयुः कीर्तिश्च वर्धते ||२३||
இத3மாக்2யா
நமவ்யக்3ரோ க3ங்கா3வதரணம்
ஶுபம் |
ய: ஶ்ருணோதி ச காகுத்ஸ்த2 ஸர்வாந் காமாநவாப்நுயாத் ||
ஸர்வே பாபா: பரணஶ்யந்தி ஆயு: கீர்திஶ்ச
வர்த4தே
||
"Oh, Rama of Kakutstha-s, he who listens to this
auspicious legend named 'The Descent of Ganga,' which is an endower of
longevity, all his wishes are achieved, all his sins are obliterated, and his
reputation and longevity are also enhanced." Thus Vishvamitra concluded
the episode of 'The Descent of Ganga.'
'கங்காவதரணம்’
எனும் கங்கையை பூமிக்கு வருதலான இந்த மங்களாமான கதையை கேட்பவருடைய எல்லா விருப்பங்களும்
நிறைவேறுகின்றன. காகுத்தனே அவருடைய பாவங்கள்
அனைத்தும் அழிந்து போகின்றன; ஆயுளும், கீர்த்தியும் பெருகுகின்றன
*
* *
इति वाल्मीकि रामायणे आदि काव्ये बाल काण्डे
चतुर्चत्वारिंशः सर्गः
இத்யார்ஷே ஸ்ரீமத்3 ராமாயணே வால்மீகியே ஆதி3
காவ்யே பா3லகாண்டே3 சதுச்சத்வாரிம்ஶ: ஸர்க3||
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் நாற்பத்தி நான்காம் ஸர்க்கம் முற்றிற்று||