Monday, August 24, 2015



ஜெய ஜெய சங்கர  ஹர ஹர சங்கர
காஞ்சி சங்கர  காமகோடி சங்கர



This site  is a humble attempt to  narrate the  great ‘Gangavatharan’ - the story of 'Descent of Ganges' as told in Valmiki Ramayana.

 The birth of Ganga is related to King Sagara, the King of Ayodhya. The great king once decided to do  Ashwamedha yagna ,  but the sacrificial horse was stolen by Indra who did not wish this ritual to be complete. To mislead King Sagar's sixty- thousand sons, Indra ties the horse next to sage Kapila's Ashram, who was deep in meditation. The princes set fire to the sage's abode thinking that he was the thief. In a fit of rage, Kapila turned the princes to ash and decreed that only if the waters of the celestial Ganga wash over these ashes , their souls will reach heaven. Bhageeratha was the great-grandson of King Sagar who went through years of stiff penance to gain Bramha's favour. Bramha agreed to allow the birth of Ganga as a river but said that her force and volume would destroy the Earth. So, Bhageeratha now turned to Shiva for help. Shiva thus received Ganga in the knotted hair on his head and released a part of her as the sacred river Ganges. As Bhageeratha was responsible for the birth of Ganga on Earth she is called ‘Bhageerathi’ at her source. 

 This story is narrated by Vishwamitra to his disciple during Balakanda. (Chapters 41-44) . The narration of ‘Descent of Ganges’  called 'Gangavatharan' is said to bring prosperity , wealth and long-life to anyone that listens to the story. There is also a practice of reciting ‘Gangavathaaran’ during   ‘Shrardham’ . As Bageeratha undertook great pains to drench the ashes of his ancestors and send them to heaven, the story is said to appease our own ancestors when read during ‘Sharardham’.

 This book is being built under the guidance of Shri K.Venkata Subramanya Iyer (Kumbakonam), whose father (Late) Shri. Krishanamurthy Sastrigal from Eenjal, Tamilnadu has recited this on innumerable occassions in Tanjore district.
The book is a collection of publicly available information from across a number of sources. The excerpts from Valmiki Ramayana and the meanings have been taken from valmikiramayan.net . The tamil translations have been taken from the tamil version of Valmiki Ramayan by Late Sri  CR. Srinivasa Iyengar.

This is a work in progress and efforts are on to expand awareness in other languages. We welcome any suggestions/corrections.

கங்காவதரணம்
முன்னுரை

அயோத்தியின் மன்னன் ஸகரன். அசுவமேத யாகம் செய்ய ஆசைபட்டான். இந்த யாகம் செய்தால் மன்னன் வலிமை பெற்று விடுவான் என பயந்த இந்திரன்யாகத்தை தடை செய்ய நினைத்தான். அசுவமேத யாகக் குதிரையை எடுத்துகொண்டு போனான். ஸகர மன்னனுக்கு அறுபதினாயிரம்  புத்ரர்கள். யாகக் குதிரையை தேடி பூவுலகம் எங்கும் அலைந்தார்கள். அங்கு கிடைக்காதபின்பூமியை குடைந்து தேடினார்கள். இதனால் பூமியினுள்ளே வாழும் ஜீவ ராசிகள் மிகுந்த துயருக்குள்ளாயின . கடைசியில் குதிரையை கபிலரின் ஆசிரமத்தில் அருகில் பார்த்ததும் அவர் தான்  குதிரையை  திருடினார் என்று எண்ணி அவரை தாக்கினார்கள்.   விஷ்ணு ரூபியான கபிலர் தன சக்தியால் அறுபதினாயிரம் குமாரர்களையும் எரித்து சாம்பலாக்கினார். மேலும்  தேவலோகத்திலிருக்கும் கங்கையை கொண்டு வந்தாலன்றி அவர்களுக்கு நீர்க்கடன் செய்து கரையேற்ற முடியாதென்ற சாபம் விட்டார்.  ஸகரனின் பேரன் அம்சுமான் (ஸகரனின் மூத்த மனைவி கேசினியின் ஒரே மகன்  அசமஞ்சன். அவன் புதல்வன் அம்சுமான்) . அம்சுமானை குதிரையையும்  தன் மற்ற குமாரர்களையும் தேடும் படி உத்தரவிட்டான் ஸகரன். இனி கங்காவதரணம் ….


வால்மீகி ராமாயணம் : இந்த சரித்திரத்தை விஸ்வாமித்ரர் தன் சீடனான ராமனுக்கு தெரிவிக்கிறார்.  ஸகரன் பரம்பரையில் வந்தவன் ராமன். தன்  முன்னோர்களின் கதையும் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த கதையுமான  'கங்காவதரணத்தைமிகுந்த ஆவலுடன் கேட்கிறான். வால்மீகி ராமாயணத்தில் பால காண்டத்தில் இந்த சரித்திரம் சொல்லப்படுகிறது (சர்க்கம் 41 முதல் இந்த கதை விஸ்தாரமாக சொல்லப்படுகிறது).

கங்காவதரணத்தின் பலன் : இந்த சரித்திரதை கேட்பவர்களுக்கு புகழ், பொருள், ஆயுள் கிடைத்து புண்ணியம் பெறுவார்கள் என்று விஸ்வாமித்ரர் கூறுகிறார்.  பகீரதனின் ப்ரயத்னத்தால்  சாம்பலாக இருந்த அவன் முன்னோர்கள்  நீர்க்கடன் பெற்று கரையேறுகிறார்கள்.  இதனால் இந்த புராணத்தை  ஸ்ரார்த்த காலத்தில் பிராம்மண-போஜனையின் போது பாராயணம் செய்யும் முறையும் இருக்கிறது. இதனால் பித்ருக்களும் திருப்தி அடைவார்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 

* * *
         Preparation for Ashwamedha yagna - அசுவமேத யாகத்துக்கு தயார் ஆகிறார்கள் 






Indra stealing the horse

























Kapila punishes Sakara’s sons - 
கபிலர் ஸகர குமாரர்களை எரித்து சாம்பாலாக்குகிறார்.



Family Tree   Sakara and his sons
 








Bala Kanda  - Sarga 41
Amshuman's search for the sacrificial horse reveals that Kapila rendered his paternal-uncles to ashes. When he wanted to offer water oblation as obsequies to their souls he did not find water. Then Garuda, the eagle-vehicle of Vishnu and maternal uncle of Amshuman advises him to get River Ganga onto earth whereby the souls are cleansed and they go to heaven. Amshuman reports the same to King Sagara, but Sagara not finding any way to get River Ganga onto earth departs to heaven at the end of his time.
பால காண்டம்  சர்க்கம் 41
தன் புத்திரர்கள் போய் வெகுகாலமாகியும் திரும்பி வராததை கண்டு சகரன் மகா தேஜஸ்வியான பேரனை அழைத்து, "குழந்தாய்! நீ மஹாசூரன்லௌகிக வைதிக வித்தைகளில் நிபுணன். தேஜஸில் என் முன்னோர்களை போன்றவன். யாகக் குதிரையை திருடியவனும் உன் சிறிய தகப்பன்களையும் கண்டு பிடித்துவா”.
பூமிக்குள்  குகைகளில் வசிக்கும் பிராணிகள் மஹா பலசாலிகள். அவைகளை எதிர்பதர்க்காக ஆயுதங்களுடன் போபூஜிக்கதக்கவர்களை பூஜித்துஇடையூறு செய்பவர்களை நாசம் செய்து ,காரியத்தை முடித்து வா. யக்ஞம் உன்னால் நிறைவேற வேண்டும்" என்றார். அவருடைய உத்தரவுபடி அம்சுமான் ஆயுதபாணியாக ஸகர புத்திரர்கள் வெட்டின வழியாக பூமிக்குள் அதிவேகமாக சென்றார்.
  அங்கே தேவ தானவ ராக்ஷச பிசாச பதக உரக கணங்களால் பூஜிக்கப்படும் திக்கஜகத்தை கண்டார். அதை பிரதக்ஷணம் செய்து க்ஷேமம் விசாரித்து, " என் சிறிய தகப்பன்கள்" எங்கேயாகக் குதிரையை யார் கொண்டு போனார்கள் ?" என்று கேட்டார். அது "அஸமஞ்ஜனின் புத்திரா! உன் காரியம் நிறைவேறி யாகக் குதிரையுடன் சீக்கிரமாய் திரும்பி போவாய்" என்றன.
 பிறகு அதி வேகமாய் போய்ஓரிடத்தில் ஸகர புத்திரர்கள்  எரிக்கப்பட்டு சாம்பல் மேடுகளாய் கிடப்பதை கண்டார். துக்கம் தாங்காமல் கோவென்று கதறி அழுதார். யாகக் குதிரை சமீபத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது . அந்த ராஜ புத்திரர்களுக்கு ஜல தர்ப்பணம் செய்ய நினைத்து சுற்றி பார்க்கையில் ஓரிடத்திலும் ஜலம் காணவில்லை.
 அப்போழுது அங்கே தன் பிதாவிற்கு மாமனும்அரிஷ்டநேமியின் புத்திரனும்  , வேகத்தில் வாயுவை போன்றவருமான கருடன் நிற்பதை கண்டார்.அவர் "குழந்தாய்! வருத்தப்படாதே.இவர்கள் இப்படி நாசமடைந்தது சகல லோகங்களுக்கும் ஹிதமே. கபில பகவானுடைய கோபாக்னியால் இவர்கள் இப்படி எரிக்கப்பட்ட படியால்  பூலோகத்தில் உள்ள ஜலத்தை எடுத்து இவர்களுக்கு தர்ப்பணம் செய்ய தகாது.
 ஹிமவானுடய மூத்த பெண்ணான கங்கையுடய ஜலத்தால் தர்ப்பணம் செய். அதனால் நனைக்கப் பட்டால் இவர்கள் சகல பாபங்களும் நீங்கி புண்யாத்மாக்களாய் ஸ்வர்க்கம் அடைவார்கள். அந்த ஜலத்தால் சாம்பல் மேடுகளை நனைக்க வேண்டும். யாகக் குதிரையை கொண்டு போ. உன் பாட்டனுடைய யாகத்தை நிறைவேற்று" என்றார்.
அப்படி அம்சுமான் யாகக்  குதிரையுடன்  அதிவேகமாய் ஸகரனிடம் வந்து நடந்த வரலாற்றையும் கருடன் சொன்ன யோசனையையும் சொன்னார். இடிவிழுந்ததை போல் அந்த துக்க ஸமாசாரத்தை கேட்ட பிறகு ஸகரன் மனம் நொந்தார். ஆயினும் ஆரம்பித்த யக்ஞத்தை விதிப்படி முடித்து அயோத்யைக்கு போனார். பிறகு முப்பதினாயிர வருஷங்கள் வரையில் அரசாண்டும்கங்கையை பூமிக்கு வரவிப்பதை பற்றி பல விதமாய் யோசித்து ஒரு நிச்சயத்தையும் செய்யாமல் தேகத்தை விட்டு ஸ்வர்க்கம் அடைந்தார். 
* * *

पुत्रांश्चिरगताञ्ज्ञात्वा सगरो रघुनन्दन | 

नप्तारमब्रवीद्राजा दीप्यमानं स्वतेजसा || ||

புத்ராம்ஶ் சிரக3தாந் ஞாத்வா ஸக3ரோ  ரகு4நந்தன|
நப்தாரம் ப்3ரவீத்ராஜா தீ3ப்யமாநம் ஸ்வதேஜஸா ||

On observing that his sons have gone long time back in search of  the ritual-horse,”Oh, Rama!, King Sagara spoke this to his grandson, Amshuman, who was radiant with his own self-resplendence." Thus Vishvamitra continued his narration about Sagara.

மைந்தர்கள் சென்று  வெகு  காலமாகியும் திரும்பி வராததை கண்டுஉள்லோளியால் பிரகாசித்து கொண்டிரும் பேரனை பார்த்து ஸகரன் கூறினார்  -

* * *
शूरश्च कृतविद्यश्च पूर्वैस्तुल्योऽसि तेजसा 
पितॄणां गतिमन्विच्छ येन चाश्वोऽपहारितः || ||




ரஶ்ச க்ருதவித்3யசஶ்ச  பூர்வைஸ்  துல்யொஸி  தேஜஸா|
பித்ரூணாம் க3திமந்  விச்சயேந  சாஶ்வோபஹாரித: ||

King Sagara started speaking to his grandson Amsuman - 'You are brave one and  have completed your education in warfare;  a coequal to your paternal-uncles in magnificence, thus you can search the course of your paternal uncles and the one that has stolen the horse.'

நீ மகாசூரன்நிறைய படித்தவன் ; நம் முன்னோர்களுக்கு நிகரான ஆற்றல் உடையவன்சிற்றப்பன்மார்கள் எங்கே போனார்கள் என்று கண்டுபிடி”, என்று ஸகரன் அம்ஷுமானிடம் கூறினார். 

*  *  *

अन्तर्भौमानि सत्त्वानि वीर्यवन्ति महान्ति च 
तेषां त्वं प्रतिघातार्थं सासिं गृह्णीष्व कार्मुकम् || ||



அந்தர்பெளமாநி சத்த்வாநி  வீர்யவந்தி மஹாந்தி ச|
தேஷாம் தவம் ப்ரதிகா4தார்த2ம்   ஸாஸிம்  க்3ருஹ்ணீஷ்வ  கார்முகம்||

‘The living beings in netherworlds of arth are intrepid and they are extraordinary also, hence you take your bow along with your sword to retaliate them in the event of their attacking you.’

பூமியினுள்ளே பேராற்றலும் பேருருவமும் கொண்ட பிராணிகள் இருக்கின்றன . அவைகளை எதிர்த்து போரிடுவதற்காக போர்வாள் மற்றும் வில் எடுத்து செல்வாயாக”.
*  *  *
अभिवाद्याभि वाद्यांस्त्वं हत्वा विघ्नकरानपि 

सिद्धार्थः संनिवर्तस्व मम यज्ञस्य पारगः || ||


அபி4வாத்3யாபி4வாத்3யாம்ஸ்த்வம் ஹத்வா விக்4நகராநபி  |
ஸித்3தா4ர்த2: ஸந்நிவர்தஸ்வ மம  யக்ஞஸ்ய பாரக3: ||

"On saluting them that are worthy for salutations and on eliminating them that are the causer of obstructions, you shall achieve your purpose of tracking the ritual-horse. You comeback safely and let my Vedic-ritual be crossed over to the other shore of mortality by you.” Thus King Sagara told his grandson Amshuman.

வணங்கி பொற்றதக்கவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துஇடையூறு செய்பவர்களை கொன்றுவிடுசென்ற காரியத்தை நீ வெற்றிகரமாக  திரும்பி முடித்து வந்த  பின்பு தான் என்னுடைய யாகம் நிறைவடையும்.”, என்று ஸகரன் அம்ஷுமானிடம் கூறினார். 
*  *  *
एवमुक्तोऽंशुमान्  सम्यक्सगरेण महात्मना 

धनुरादाय खड्गं च जगाम लघुविक्रमः || ||


ஏவமுக்தோம்ஶுமாந்  ஸம்யக்ஸக3ரேண மஹாத்மநா |
4நுராதா3ய க2ட்33ம்  ச  ஜகா3ம லகு4விக்கிரம: ||

"When the great-souled king Sagara has thoroughly said in this way, that adroitly agile Amshuman proceeded wielding a bow and a sword.

பராக்ரமசாலியான அம்ஷுமன் , பேரரசான சகரனுடைய வார்த்தைகளை கேட்டதும் வில்லும் வாளும் தாங்கி புறப்பட்டான்
*  *  *
स खातं पितृभिर्मार्ग मन्तर्भौमं महात्मभिः 

प्रापद्यत नरश्रेष्ठ तेन राज्ञाभिचोदितः || ||


ஸ  கா2தம் பித்ருபி4ர்மார்க3மந்தர் பௌ4மம் மஹாத்மபி4: |
ப்ராபத்3யத நரஶ்ரேஷ்ட2  தேந ராக்ஞாபி4சோதி3த: ||

Motivated by King Sagara, Oh, Rama! The best one among men, Amshuman progressed on the walkway that was hollowed out by his great-souled paternal-uncles inside the earth.

வீரம் மிக்கவர்களான சிற்றப்பன்களால் பூமியை குடைந்து தோண்டப்பட்ட வழியிலேயே ஸகர மன்னன் கொடுத்த குறிப்பின் படி சென்றான் , பேரன் அம்ஷுமன்.
*  *  *
देव दानव रक्षोभिः पिशाच पतगोरगैः |
पूज्यमानम् महातेजा दिशा गजमपश्यत ||  ||

தே2வதா3நவரக்ஷோபி4:  பிஶாசபதகோ3ரகை3:|
பூஜ்யமாநம் மஹாதேஜா  தி3ஶாக3ஜமபஶ்யத ||

And he that resplendent Amshuman,  beheld one of the four directional elephants of the earth which is venerated by Gods, monsters, demons, imps, vultures and serpents.

போகும் வழியில் , ஓர் இடத்தில் தேவ-தானவ-ராக்ஷஸ-பிசாச-பக்ஷி-நாகர்களால்  போற்றப்படும்  பேராற்றல் படைத்த ஒரு திசை யானையை கண்டான்.

*  *  *
 तम् प्रदक्षिणम् कृत्वा पृष्ट्वा चैव निरामयम् |
पितृन्  परिपप्रच्छ वाजि हर्तारमेव  ||  ||

ஸ தம்  ப்ரத3க்ஷிணம்  க்ருத்வா  ப்ருஷ்ட்வா சைவ  நிராமயம்  |
பித்ரூந்  ஸ  பரிபப்ரச்சவாஜிஹர்தாரமேவ  ச ||

On circumbulating that elephant in supplication and on enquiring after its well-being, he that Amshuman enquired about his paternal-uncles and about the one that has stolen the ritual-horse.

அவன் அதனை வலம்  வந்து தொட்டுத்தடவிகுசலம் விசாரித்துதன சிற்றப்பங்களை பற்றியும்குதிரை திருடனை  பற்றியும் கேட்டான்.
*  *  *
दिशागजस्तु तच्छ्रुत्वा प्रीत्याहांशुमतो वचः 

आसमञ्ज कृतार्थस्त्वं सहाश्वः शीघ्रमेष्यसि || ||


தி2ஶாகா3ஜஸ்து  தச்ச2ருத்வா  ப்ரீத்யாஹாம்ஶுமதோ வச : |
ஆஸமஞ்ஜ  க்ருதார்த2ஸ்த்வம்  ஸஹாஶ்வ:  ஶீக்4ரமேஷ்யஸி ||

On hearing that enquiry of Amshuman,  that directional elephant with great perception replied on its part saying, 'Oh Amshuman! Son of Asamanja, you will  achieve your mission  will return expeditiously along with the horse’ .

அம்ஷுமானின் வேண்டுகோளை கேட்டு ,அந்த திசை யானை, "அசமஞ்சன் புதல்வனே!வந்த காரியத்தை முடித்துக்கொண்டு , குதிரையுடன் விரைவில் போக போகிறாய்", என்று பதில் கூறிற்று.
*  *  *
तस्य तद् वचनम् श्रुत्वा सर्वानेव दिशा गजान् |
यथा क्रमम् यथा न्यायम् प्रष्टुम् समुपचक्रमे || १०||

தஸ்ய தத்3வசநம் ஶ்ருத்வா  ஸர்வாநேவ தி3ஶாக3ஜாந் |
யதா2க்ரமம்  யதா2ந்யாயம் ப்ரஷ்டும் ஸமுபசக்ரமே ||
On hearing that word of that directional elephant he departed from there, and on sequentially reaching other directional elephants that are abiding in other directions of earth according to their positions he commenced to ask the same enquiry which he made with the first and according to the established procedures of their venerability.

அந்த நல்வாக்கை கேட்ட அம்ஷுமன் , மற்ற திக்கஜங்களையும் வரிசையாக பணிவன்புடன் கேட்க தொடங்கினான்.
*  *  *
तैश्च सर्वै र्दिशापालै र्वाक्यज्ञै र्वाक्यकोविदैः 

पूजितः सहयश्चैव गन्तासीत्यभिचोदितः || ११||


தைஶ்ச ஸர்வைர் தி3ஶாபாலைர் வாக்யஞைர் வாக்யகோவிதை3:|
 பூஜித: ஸஹயஶ்சைவ 3ந்தாஸீத் யபி4சோதி3த:||

All the elephants that safeguard the directions of earth which have the faculties of articulation and eloquence  adored Amshuman and motivated him by saying, 'you will be going from here taking the horse.'

பேச்சில் வல்லவைகளான மற்ற திக்கஜங்கள் அவனை போற்றி பூஜித்து , 'குதிரையுடன் கூட திரும்பி வருவாய்என தெம்பான பதிலை கூறின.
*  *  *
तेषाम् तत् वचनम् श्रुत्वा जगाम लघुविक्रमः |
भस्म राशी कृता यत्र पितरस्तस्य सागराः || १२||

தேஷாம் தத் வசநம் ஶ்ருத்வா ஜகா3ம லகுவிக்கிரம: |
4ஸ்மராஶீக்ருதா யத்ர பிதரஸ்தஸ் ய ஸாக3ரா:|| 

On hearing that common blessing of all the directional-elephants, he that nimble-footed Amshuman went to the place where his paternal-uncles, sons of Sagara, were rendered as mounds of ashes.

அதை கேட்ட பின்னர்,  தொடர்ந்து சென்ற அந்த மாவீரன்கர  குமாரர்களான தன  சிற்றப்பன்கள் சாம்பல் குவியலாக கிடந்த இடத்தை சென்று அடைந்தான்
*  *  *
 दुःख वशमापन्नस्त्व समंजसुतस्तदा   |
चुक्रोश परमार्तस्तु वधात् तेषाम् सुदुःखितः || १३||

ஸ  து3:க2வஶமாபந்நஸ் த்வஸஞ்ஜஸுதஸ்ததா3 |
சுக்ரோஶ பரமார்தஸ்து வதா4த்தேஷாம் ஸுது:கித ||

Amshuman  that son of Asamanja, could not control the anguish of not physically seeing  and wept. He was highly agonised and extremely anguished at their destruction.

அம்ஷுமானுக்கு (சிற்றப்பர்கள் கபிலரால் எரிகப்படார்கள் என்பதை அறிந்தும்குமாரர்கள் அழிக்கப்பட்டதால் துக்கம் மேலிட கேவி கேவி அழுதான்.
*  *  *
यज्ञियम्  हयम् तत्र चरन्तमविदूरतः |
ददर्श पुरुषव्याघ्रो दुःख शोक समन्वितः || १४||

யக்ஞியம் ச ஹயம் தத்ர சரந்தமவிதூ3ரத:|
33ர்ஶ புருஷவ்யாக்4ரோ து3:க2ஶோகஸமந்வித:||

That tigerly-man Amshuman who is overwhelmed by agony and anguish, also beheld there the horse of Vedic-ritual that was grazing nearby.

துயரம்-கவலைகளால் ஆட்கொள்ளப்பட்ட அந்த வீரன்அசுவமேத யாகக்குதிரை அருகிலேயே திரிந்து கொண்டிருப்பதை பார்த்தான்.
*  *  *
 तेषाम् राज पुत्राणाम् कर्तु कामो जल क्रियाम् |
सलिलार्थी महातेजा  चापश्यज्जलाशयम्|| १५||

ஸ  தேஷாம் ராஜபுத்ராணாம் கர்துகாமோ ஜலக்ரியாம் |
ஸலிலார்தீ2 மஹாதேஜா ந சாபஶ்யஜ்  ஜலாஶயம் ||

When he,  that great resplendent Amshuman wanted to offer obsequial waters to the departed sons of Sagara and searched for water he could not find any fount of water.

அரசகுமாரர்களுக்கு நீர்க்கடன் செலுத்த விரும்பிய அவன் தண்ணீருக்காக இங்குமங்கும் பார்த்தான்ஆனால் நீர்நிலை எதுவும் கண்ணில் படவில்லை 
*  *  *
विसार्य निपुणाम् दृष्टिम् ततोपश्यत् खगाधिपम् |
पितृणाम् मातुलम् राम  सुपर्णमनिलोपमम्|| १६||

விஸார்ய நிபுணாம் த்3ருஷ்டிம் ததோபஶ்யத்க2கா3தி4பம் |
பித்ரூணாம்  மாதுலம்  ராம ஸுபர்ணமநிலோபமம் ||

Spanning his expert glances, oh, Rama, he then saw the rapid-winged king of birds, namely Garuda, the eagle-vehicle of Vishnu and the maternal uncle of his father and other paternal-uncles, and whose flight was similar to that of the wind-God.

நெடுந்தொலைவுக்கு பார்வையை  செலுத்திப்பார்த்தான்அப்போது அவன் சிற்றன்ப்பன்களின் மாமனும்அனலை போல ஒளிர்பவனும் , பறவைகளின் தலைவனுமான கருடனை கண்டான்.

*  *  *

 चैनमब्रवीद्वाक्यम् वैनतेयो महाबलः |
मा शुचः पुरुषव्याघ्र वधोयम् लोक सम्मतः || १७||

ஸ சைநமப்3ரவீ த்3 வாக்யம் வைநதேயோ மஹாப3ல:|
மா ஶுச: புருஷவ்யாக்4ர வதோ4யம் லோகஸம்மத:||

Garuda, that great-mighty son of Lady Vinata, said to Amshuman, 'Do not bemoan, Oh tigerly-man! This eradication of your paternal-uncles is worthwhile to the worlds.’

விநதையின் மைந்தனான மகாபலமுடைய கருடன் அவனை பார்த்து "வீரனே! (சிற்றப்பன்மார்கள் இறந்தது குறித்துவருந்தாதேஉலக நன்மைக்காகவே அவர்கள் வதம் செய்யப்பட்டார்கள்.”
*  *  *
कपिलेनाप्रमेयेण दग्धा हीमे महाबलाः |
सलिलम् नार्हसि प्राज्ञ दातु मेषाम् हि लौकिकम् || १८ ||

கபிலேநாப்ரமேயேண த3க்3தா ஹீமே மஹாப3லா:|
ஸலிலம்  நார்ஹஸி  ப்ராக்ஞ்ய தா3துமேஷாம் ஹி   லௌகிகம் ||

' Oh, observant Amshuman! In fact, Kapila, the imponderable Sage, burnt down those great-mighty paternal-uncles of yours,   as such it will not be apt of you to offer the mundane obsequial water-oblations to them, indeed.’

பேராற்றல் படைத்த இவர்கள் ஒப்புயர்வற்ற கபிலரால் எரிக்கப்பட்டு மாண்டார்கள்அதனால்இவ்வுலகத்தின் தண்ணீரால் பித்ரு கடன் கொடுப்பது சரியானது அல்ல.
*  *  *
गंगा हिमवतो ज्येष्ठा दुहिता पुरुषर्षभ |
तस्याम् कुरु महाबाहो पितॄणाम् तु जल क्रियाम् || १९||

3ங்கா3 ஹிமவததோ  ஜ்யேஷ்டா2 துஹிதா புருஷர்ஷப4 |
தஸ்யாம் குரு மஹாபா3ஹோ பித்ரூணாம் து  ஜலக்ரியாம்||

" 'Oh, best one among men, River Ganga is the elder daughter of Himavanta, and oh, dextrous one, you have to offer water-oblation to the departed paternal-uncles of yours in her waters, namely the holy waters of River Ganga.

ஹிமவானின் மூத்த புதல்வி  கங்கை (அவள் நதியாக இருக்கிறாள்.) அந்த கங்கையின் புனித நீரைக்கொண்டு பித்ருக்களான சிற்றப்பன்களுக்கு தர்ப்பணம் செய்
*  *  *
भस्मराशीकृतानेतान्पावयेल्लोकपावनी|

तया क्लिन्नमिदम् भस्म गंगया लोक कान्तया |

षष्टिम् पुत्र सहस्राणि स्वर्ग लोकम्  नयिष्यति|| २०||


4ஸ்மராஶீக்ருதாநேதாத் பாவயேல்லோகபாவநீ |
தயா க்லிந்நமித3ம் ப4ஸ்ம  3ங்க3யா லோக காந்தயா ||
ஷஷ்டிம் புத்ர ஸஹஸ்ராணி  ஸ்வர்க்க3லோகம்  நயிஷ்யதி |

'World purifier River Ganga will drift your ancestors , rendered as mounds of ashes to heaven.  As Ganga who is adored by all worlds drenches this ash , she herself will lead the sixty-thousand sons of Sagara to heaven.’

சாம்பல் குவியலாக் கப்பட்டுவிட்ட இவர்களை புனிதமான கங்கை நீர் நனைக்கட்டும். .சாம்பல் குவியலாகிவிட்ட அறுபதினாயிரம் ஸ கர புத்திரர்களைமக்கள் கவர்ந்திழுக்கும் கவின்மிகு கங்கை தன் நீரால் நனைத்து ஸ்வர்க்கலோகத்துக்கு அனுப்பி வைப்பாள்எனவே தேவலோகத்திலிருந்து மண்ணுலகிற்கு கங்கையை கொண்டு வா
*  *  *
निर्गच्छ चाश्वम् महाभाग संगृह्य पुरुषर्षभ |
यज्ञम् पैतामहम् वीर निर्वर्तयितुमर्हसि || २१||

நிர்க3ச்ச2 சாஶ்வம் மகாபா43 ஸங்க்3ருஹ்ய புருஷஷர்ப4 |
யக்ஞம் பைதாமஹம் வீர நிர்வர்தயிதுமர்ஹஸி ||

'Oh, great fortunate one, oh, best one among men, you may proceed from here with the horse, oh, brave one, it will be apt of you to carry out the Vedic-ritual of your grandfather.' Thus Garuda said to Amshuman.

கங்கையை  இவ்வுலகுக்கு கொண்டுவர உன்னால் முடியுமானால் முயற்சி செய்பெரும்பேறு பெற்றவனே!மனதை தைரிய படுத்திக்கொண்டு இப்போது குதிரையுடன்  செல்வாயாக . உன் பாட்டனாரால்  ஆரம்பிக்கப்பட்ட யாகத்தை பூர்த்தி செய்வதற்கு இதுதான் வழி.



*  *  *
सुपर्ण वचनम् श्रुत्वा सोम्शुमानतिवीर्यवान्  |
त्वरितम् हयमादाय पुनरायान्महायशाः || २२ ||

ஸுபர்ண வசநம்  ஶ்ருத்வா ஸோம்ஶுமாநதிவீர்யவாந் |
த்வரிதம் ஹயமாதா3ய புநராயாந் மகாயஶா:||

"On hearing the words of that great-winged eagle, Garuda, he that highly brave and well-renowned Amshuman swiftly took the horse, and returned to the ritual place of his grandfather, king Sagara.

மகாவீரனான அம்சுமான் கருடனின் ஆலோசனைபடி குதிரையை  அழைத்துக்கொண்டு வேகமாக திரும்பி வந்தான் 
*  *  *
ततो राजानमासाद्य दीक्षितम् रघुनंदन |
न्यवेदयत् यथा वृत्तम् सुपर्ण वचनम् तथा ||२३||

ததோ ராஜாநமாஸாத்3ய தீ3க்ஷிதம் ரகு4நந்த3ந |
ந்யவேத3யத்3யதா2வ்ருத்தம் ஸுபர்ணவசநம் ததா2 ||

Then on reaching the King Sagara, who is under the vow of the ritual, oh, Rama, Amshuman described what had happened to his sons. He also shared the advice of Garuda.

யாகதீட்சையிலிருந்த மன்னன் ஸகரனிடம் நடந்தவைகளெல்லாம் கூறினான்கருடன் கூறிய ஆலோசனையும் சொன்னான் .

*  *  *
तत् श्रुत्वा घोर संकाशम् वाक्यमन्शुमतो नृपः |
यज्ञम् निर्वर्तयामास यथा कल्पम् यथा विधि || २४||

தச்ச்2ருத்வா  கோ4ரஸங்காஶம் வாக்யமம்ஶுமதோ ந்ரு :   |
யக்ஞம் நிர்வர்தயாமாஸ யதா2கல்பம் யதா2விதி4 || 

The Kings heard those unendurable words from Amshuman. He firstly completed the Vedic-rituals scripturally and procedurally.

அம்சுமானிடமிருந்து பயங்கர செய்திகளை கேட்ட அரசன்உரிய  நியமங்களோடும் விதிமுறைகளோடும் யாகத்தை பூர்த்தி செய்தான்.

स्व पुरम् चागमच्छ्रीमानिष्टयज्ञो महीपतिः |
गंगायाश्चागमे राजा निश्चयम् नाध्यगच्छत ||२५||

ஸ்வபுரம் சாக3மச்ச2ரீமாநிஷ்டயக்ஞோ மஹீபதி: |
3ங்கா3யாஶ்சாக3மே ராஜா நிஶ்சயம்  நாத்4யக3ச்ச3||

On completing the Vedic-ritual King Sagara arrived at his capital, but that king could not arrive at a decision about the arrival of Ganga to earth.

அசுவமேத யாகத்தை நிறைவு செய்துவிட்டுராஜ்யலக்ஷ்மியையுடய ஸகரன் தன் நகரத்துக்கு திரும்பி சென்றான்.  கங்கையை கொண்டு வருவது பற்றி பல விதமாக சிந்தித்தும் எந்த விதமான நிச்சயத்தையும் எட்டவில்லை.
अगत्वा निश्चयम् राजा कालेन महता महान् |
त्रिंशत् वर्ष सहस्राणि राज्यम् कृत्वा दिवम् गतः || २६||

அக3த்வா நிஶ்சயம் ராஜா காலேந மஹதா மஹாந் |
த்ரிம்ஶத்3வர்ஷ ஸஹஸ்ராணி  ராஜ்யம்  க்ருத்வா தி3வம் கத: ||

"That great king Sagara could not get at any resolve in getting Ganga to earth even after a long time, and on ruling kingdom for thirty-thousand years he went to heaven." Thus Vishvamitra continued his narration about the ancestors of Rama.

அந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமலேயே  நீண்ட காலம் கடத்தி முப்பதாண்டாயிரம் ஆண்டுகள் அரசு செலுத்தி வானுலகை அடைந்தான்.
*  *  *
इति वाल्मीकि रामायणे आदि काव्ये बाल काण्डे एक चत्वारिंशः सर्गः

இத்யார்ஷே  ஸ்ரீமத்3 ராமாயணே  வால்மீகியே ஆதி3  காவ்யே
பா3லகாண்டே3 ஏக சத்வாரிம்ஶ: ஸர்க3: ||

Thus, this is the 41st chapter in Bala Kanda of Valmiki Ramayana, the First Epic poem of India.


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் நாற்பத்தி ஒன்றாவது ஸர்க்கம் முற்றிற்று 





Bala Kanda - Sarga 42
Introduction
Bhageeratha's effort in bringing Ganga to earth is fulfilled. Amshuman and his son Dileepa could not make any effort to bring the divine river to earth. But Bhageeratha, the son of Dileepa, staunch at heart tries earnestly to get her onto earth. Brahma agreeing for this descent of Ganga designates Lord Shiva to bear the burden of the onrush of Ganga, because  earth cannot sustain it.
*  *  *
ஸர்க்கம் - 42
திலீபன் - பகீரதன்

ஸகரன் காலகதியை அடைந்த பிறகு ஜனங்கள் தர்மவானான அம்சுமானுக்கு  பட்டாபிஷேகம் செய்தார்கள். அவனுடைய புத்திரனே திலீபன். அவனிடத்தில் ராஜ்யத்தை ஒப்புவித்து அம்சுமான்ஹிமயமலை சிகரத்தில்  ஒரு புண்ணிய க்ஷேத்திரத்தில் முப்பத்திரெண்டாயிரம் வருஷங்கள் வரையில் கடுந்தவம் செய்தும் கங்கையை பூமிக்கு தருவிக்க முடியாமல் ஸ்வர்க்கம் அடைந்தான்.
தன பாட்டனார்கள் கோரகதி அடைந்ததை திலீபன் கேட்டுதுக்கத்தால் மன வாடி, "கங்கையை  பூமிக்கு கொண்டு வருவது எப்படிஅந்த ஜலத்தால் என் பாட்டனார்களுக்கு தர்ப்பணம் செய்வது எப்படி?அவர்களுக்கு உத்தம கதி கிடைக்கும் உபாயமென்னஎன்று எவ்வளவு யோசித்தும் ஒரு முடிவும் ஏற்படவில்லை. அதே ஞாபகமாயிருந்த அந்த தர்மாத்மாவுக்கு பகீரதன் பிறந்தான்.
 திலீபன் எண்ணிறைந்த யாக யக்ஞங்களை நடத்தி முப்பதாயிரம் வருஷங்கள் வரையில் ஆண்டுபிறகு பகீரதனுக்கு பட்டம் கட்டிதன் முன்னோர்களை கறையேற்ற வழி தெரியாமல் அதே கவலையால் காலகதி அடைந்து தன புண்ய கர்மங்களால் ஸ்வர்க்கத்திருக்கு சென்றான்.
பகீரதன் வெகு காலமாகி புத்திரனில்லமல் வருந்திகங்கையை  பூமிக்கு எப்படியாவது கொண்டு வர நிச்சயித்துமந்திரிகளிடத்தில் ராஜ்யத்தை ஒப்புவித்த பின்கோகர்ண க்ஷேத்திரத்தில்  கடுந்தவம் செய்தார்.
பஞ்சாக்னி மத்தியில் நின்றுகைகளை உயரத்தூக்கி கொண்டு இந்த்ரியங்களையும் மனதையும் அடக்கிமாதத்திற்கு ஒரு தடவை சிறிது ஆஹாரம் செய்துபலஆயிர வருஷங்களை கழித்தார்.அந்த கோரமான தவத்தால் பிரம்மா வெகு ஸந்தோஷம்  அடைந்து தேவர்களுடன் அங்கே வந்து " பகீரதா! மகானுபாவா! உன் தவத்தால் மிகவும் ஸந்தொஷமடைந்தேன். வேண்டிய வரங்களை கேள்" என்றார்.  
அந்த ராஜரிஷி அவரை வணங்கி கைகூப்பி, "ஸ்வாமி! தாங்கள் என்னிடத்தில் ஸந்தொஷமடைந்தால்என் தவம் பயன் பெருமானால்,நான் கங்கா ஜலத்தால் செய்யும் தர்ப்பணம்சாம்பல் மேடாகக்கிடக்கும் ஸகர புத்திரர்கள் அனைவரையும் நனைத்து அவர்களுக்கு உத்தம கதியை கொடுக்கட்டும்.
மேலும் இக்ஷவாகு குலத்திற்பிறந்த எனக்குவம்ச விருத்தி செய்யும் ஒரு புத்திரனை அனுக்ரஹிக்க வேண்டும்" என்றார். பிரஹ்மா,  "இக்ஷவாகு குல திலகா! உன் எண்ணங்கள் நிறைவேறும். ஹிமவானுடய மூத்த பெண்ணான கங்கை அந்த மலையில் வஸிக்கிறாள். அவள் பூமிக்கு வந்தால் அவள் வேகத்தை தாங்கக்கூடியவர் பரமசிவனே!  அதற்காக அவரை பிரார்த்திக்க வேண்டும். இல்லாவிட்டால் கங்கையின் வேகத்தால் பூமி பிளந்து விடும்" என்றார்.
 இப்படி அனுக்ரஹித்து கங்கையை அழைத்து "தகுந்த காலம் வரும் பொழுது பகீரதனுடைய இஷ்டத்தை பூர்த்தி செய்" என்று கட்டளையிட்டு ,தேவர்களுடன் தன்னுலகிற்க்குப் போனார். 
*  *  *
कालधर्मम् गते राम सगरे प्रकृती जनाः |
राजानम् रोचयामासुर् अंशुमन्तम् सुधार्मिकम् || ||

காலத4ர்மம் க3தே ராம ஸக3ரே ப்ரக்ருதீஜநா :|
ராஜாநம் ரோசயாமாஸு ரம்ஶுமந்தம்  ஸுதா4ர்மிகம் ||

‘When King Sagara passed away owing to the irrefutable virtue of time, the ministers and subjects of that kingdom were predisposed towards the highly honourable Amshuman to become their king and they enthroned him accordingly.’ Thus Vishvamitra continued narration about the predecessors of Rama.

ராமா! ஸகரன் ஆயுள் முடிந்து விண்ணுலகம் ஏகியதும் , நகர மக்கள் அறநெறி நிற்பவனான அம்சுமானை அரசானாக்கிரார்கள் 
*  *  *
 राजा सुमहान् आसीतंशुमान् रघुनंदन |
तस्य पुत्रो महानासीत् दिलीप इति विश्रुतः ||||

ஸ ராஜா ஸுமஹாநாஸீத3ம்ஶுமாந்  ரகு4நந்த3ந |
தஸ்ய புத்ரோ மஹாநாஸீத்3தி3லீப இதி விஶ்ருத:  ||

He that Amshuman turned out to be a very great king, and oh, Rama of Raghu's dynasty, he begot a marvellous son ,renowned as Dileepa.

அம்சுமான் மிகச்சிறந்த அரசானாக விளங்கினான்அவனுடைய மைந்தனான திலீபன் புகழ்மிக்கவனாக இருந்தான்

*  *  *
तस्मिन्राज्यं समावेश्य  दिलीपे रघुनंदन |
हिमवच्छिकरे पुण्ये तपस्तेपे सुदारुणम् ||||

தஸ்மிந் ராஜ்யம் ஸமாவேஶ்ய தி3லீபே  ரகுநந்தந |
ஹிமவச்சி22ரே  புண்யே தபஸ்தேபே ஸுதா3ருணம் ||

Assigning the kingdom to Dileepa, oh, Rama of Raghu's dynasty, Amshuman undertook very stern ascesis on a pleasant peak of Himalayas desiring the descent of River Ganga to earth.

திலீபனிடம் அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு ஹிமய  மலையில் ஒரு சிகரத்தில் கடுமையான தவத்தை மேற்கொண்டான் அம்சுமான்.

*  *  *
द्वाद्त्रिंशच्च सहस्राणि वर्षाणि सुमहायशाः|
तपोवन गतो राजा स्वर्गम् लेभे तपोधनः || ||

த்3வாத்ரிம்ஶச்ச  ஸஹஸ்ராணி வர்ஷாணி ஸுமஹாயஶா:|
தபோவந க3தோ  ராஜா ஸ்வர்க3ம்  லேபே4 தபோத4:  ||

On practising ascesis in ascetic-woods for thirty-two thousand years that highly renowned King Amshuman achieved heaven as he acquired only the wealth of practising the ascesis.  {Instead of achieving reward of ascesis in the form of descent of River Ganga, he could achieve only his personal merit of his penance, namely an abode in heaven.}
முப்பத்திரண்டாயிரம் ஆண்டுகள் தபோவனத்தில் இருந்து கீர்த்தி பெற்ற  மன்னன் ஸ்வர்க்கதை அடைந்தான்.
*  *  *
दिलीपस्तु  महातेजाः श्रुत्वा पैतामहम् वधम् |
दु:खोपहतया  बुद्ध्या निश्चयम्  नाध्यगच्छत ||||

தி3லீபஸ்து  மகாதேஜா: ஶ்ருத்வா  பைதாமஹம் வத4ம் |
து3:கோ2பஹதயா பு3த்3த்4யா நிஶ்சயம் நாத்4யக3ச்ச2த ||

 The great resplendent Dileepa on hearing the elimination of his grandfathers, the sixty thousand sons of Sagara at the hands of sage Kapila, and with a mind that was marred by the plight of his father Amshuman in absolving the souls of Sagara's sons, he that Dileepa could not arrive at any decision concerning the descent of Ganga.

மகாவீரனான திலீபன்பாட்டனார்கள் வதம் செய்யப்பட்டதை கேட்டுமனம் மிக வருந்தி,  ( கங்கையை பூமிக்கு கொண்டு வருவதற்கான பல யோசனைகள் செய்தும் எந்த முடிவையும் எடுக்கவில்லை ).

*  *  *
कथम् गंगा अवतरणम् कथम् तेषां जलक्रिया |
तारयेयम् कथम्  एतान् इति चिंतापरो अभवत् ||||

2ம் க3ங்கா3வதரணம் கத2ம் தேஷாம் ஜலக்ரியா
தாரையேயம் கத2ம் சைதாநிதி  சிந்தாபரோ4வத் ||

Dileepa became worried as to how River Ganga is to be alighted onto earth from heaven, how water-oblations are to be offered for the souls of Sagara's sons, and how to cross the souls over this mortal world.

நான் எவ்வாறு கங்கையை இறங்கி வரச்செய்வேன்?எவ்வாறு என் முன்னோர்களை கரையேற்றுவேன் ?அவர்களுக்கு எவ்வாறு ஜலக்கடன் செய்வேன்என்ற கவலையில் மூழ்கினான்.

*  *  *
तस्य चिंतयतो नित्यम् धर्मेण विदितात्मनः |
पुत्रो भगीरथो नाम जज्ञे परम धार्मिकः ||||

தஸ்ய சிந்தயதோ நித்யம் 4ர்மேண  விதி3தாத்மந:|
புத்ரோ   4கீ3ரதோ2  நாம ஜக்ஞே  பரமதா4ர்மிக:||

To him who was self-mortified and who was always thinking righteously about the alight of Ganga onto earth, to such a Dileepa , a most-virtuous son by name Bhageeratha was born.
எவ்வாறு என்  மூதாதையர்களை கரையேற்றுவது என் கடமையாயிற்றே?’ என்ற அறிவுணர்வுடனும் தெளிந்த சிந்தனையுடனும் இருந்த திலீபனுக்கு தருமமூர்த்தியான பகீரதன் என்ற பெயருடையவன் புத்திரனாகப்  பிறந்தான்.

*  *  *
दिलीपस्तु महातेजा यज्ञैर्बहुभिरिष्टवान् |
त्रिंशत् वर्ष सहस्राणि राजा राज्यमकारयत् ||||

தி3லீபஸ்து மகாதேஜா யக்ஞைர்  ப3ஹுபி4ரீஷ்டவாந் |
த்ரிம்ஶத்வர்ஷ ஸஹஸ்ராணி ராஜா ராஜ்யமகாரயத் ||

That great-resplendent king Dileepa on his part performed numerous Vedic-rituals, and he ruled the kingdom for thirty thousand years - to the delight of each of his subjects, but could not find a way to fetch Ganga.

மகாதேஜஸ்வியான திலீபன் பலவிதமான அநேக யாகங்கள் செய்தான்.முப்பதினாயிரம் ஆண்டுகள் மக்கள் மகிழ நல்ல  அரசாட்சி செய்தான் .  அனால் கங்கையை பூமிக்கு கொண்டு வர இயலவில்லை.
*  *  *
अगत्वा निश्चयम् राजा तेषाम् उद्धरणम् प्रति |
व्याधिना नरशार्दूल काल धर्ममुपेयिवान् ||||

அக3த்வா நிஶ்சயம் ராஜா தேஷாமுத்34ரணம்  ப்ரதி
வ்யாதி4நா  நரஶார்தூ3ல காலத4ர்மமுபேயிவாந்|| 

Oh, tigerly-man Rama! That king Dileepa by not attaining any choice towards  uplifting the souls of his grandparents to heaven by bringing Ganga to earth, he took to illness, and he attained the ultimate virtue of time, namely demise.

மூதாதையர்களை கரையேற்றும் விஷயத்தில் எந்த முடிவுக்கும் வராமலே,நோயினால் பீடிக்கப்பட்டு மரணம் அடைந்தான் திலீபன் .

*  *  *
इन्द्रलोकम् गतो राजा स्वार्जितेनैव कर्मणा |
रम्ये भगीरथम् पुत्रम् अभिषिच्य नरर्षभः ||१०||

இந்த்3ரலோகம்  க3தோ  ராஜா ஸ்வார்ஜிதேநைவ கர்மணா |
ரம்யே ப4கீ3ரத2ம் புத்ரமபி4ஷிச்ய நரர்ஷப4: ||

That best one among men, namely king Dileepa, on anointing his son Bhageeratha in the kingdom went to the abode of Indra, namely the heaven, only by his self-acquired merits of deeds.

தான் செய்த புண்ணிய கர்மாக்களின் பயனாக இந்திர லோகத்தை அடைந்து இன்புற்றிருந்தான்.அரசர்களுக்குள் காளை  போன்றவனான பகீரதன் மன்னனாக  முடிசூட்டப்பட்டான்.

*  *  *
भगीरथस्तु राजर्षिः धार्मिको रघुनंदन |
अनपत्यो महातेजाः  प्रजा कामः  चाप्रजाः ||११||

4கீ3ரத2ஸ்து  ராஜர்ஷிர்தா4ர்மிகோ  ரகுநந்தந | 
அநபத்யோ  மஹாதேஜா: ப்ரஜாகாம: ஸ  சாப்ரஜா:||

Oh, Rama, the legatee of Raghu, but on his part that self-righteous and kingly-sage Bhageeratha was childless, and that great king longed-for offspring.
ரகுநந்தன! பகீரதன் ராஜரிஷி போன்றிருந்தான்.தர்மம் தவறாதவனாக இருந்தான்.  அனால் மகப்பேறு இல்லை. மகன் வேண்டுமென்று ஆசைப்பட்டான்.


मन्त्रिष्वाधाय तत् राज्यम् गङ्गावतरणे रतः|
स तपो दीर्घमातिष्ठद् गोकर्णे रघुनंदन ||१२||
ऊर्ध्व बाहुः पंचतपा मासाहारो जितेइन्द्रियः |

மந்த்ரிஷ்வாதா4ய தத்3ராஜ்யம் க3ங்கா3வதரணே ரத:|
ஸ  தபோ 3தீர்க4மாதிஷ்ட2த்3 கோ3கர்ணே  ரகு4நந்த3ந ||
ஊர்த்4வபா3ஹூ: பஞ்சதபா மாஸாஹாரோ ஜிதேந்த்3ரிய:||

Interested in the alighting of River Ganga on earth, oh, Rama, the descendent of Raghu, king Bhageeratha delegated his kingdom to the custody of his ministers and people and firmed up himself in sustained asceticism on Mount. Gokarna in Himalayas, and he practise ascesis standing amid five-fires, upraising his hands, with a monthly sustenance and with his sense conquered.  {The five-fires are pancha agni-s the four earthly fires in four corners of directions and the sun's fire overhead}.

அதனால் நாட்டையும் மக்களையும் அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டுகங்கையை கொண்டு வருவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுகோகர்ணம் என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தில் நீண்ட காலம் தவத்தில் மூழ்கினான். கைகளை  தூக்கி கொண்டு பஞ்சாக்னி மத்தியில் நின்றான். புலன்களை வென்று மாதம் ஒரு வேளை மட்டும் உணவு கொண்டான்.

*  *  *
तस्य वर्षसहस्राणि घोरे तपसि तिष्ठतः ||१३||
अतीतानि महाबाहो तस्य राज्ञो महात्मनः |
सुप्रीतो भगवान् ब्रह्मा प्रजानाम् पतिः ईश्वरः ||१४||

தஸ்ய வர்ஷஸஹஸ்ராணி கோ4ரே தபஸி திஷ்டத:|
அதீதாநி மகாபா3ஹோ  தஸ்ய ராக்ஞோ மகாத்மந:|
ஸுப்ரீதோ ப43வாந் ப்3ரஹ்மா ப்ரஜாநாம் பதீரீஶ்வர :||

Thousands of years rolled by while Bhageeratha stood practising his severe ascesis, oh, dextrous Rama, and the Lord and Master of all beings, namely God Brahma was well pleased  with that great-souled king's ascesis.

மஹாத்மாவான மன்னன் இவ்விதம் ஆயிரம் ஆண்டு காலம் கடுமையான தவம் செய்தான். மக்களின் தலைவரும்,வல்லமை பொருந்தியவருமான பகவான் ப்ரஹ்மா பகீரதனின் நெடிய தவத்தினால் திருப்தி அடைந்தார்.

*  *  *
ततः सुर गणैः सार्धमुपागंय पितामहः |     
भगीरथम् महात्मानम्  तप्यमानमथाब्रवीत् ||१५||

தத:  ஸுரக3ணை ஸார்தமுபாகம்ய  பிதாமஹ :|
4கீ3ரத2ம் மகாத்மாநம்  தப்யமாநமதா2ப்3ரவீத் ||
Forefather Brahma then arrived along with assemblages of gods, and spoke this way to the great-souled Bhageeratha who is deep in the practise of ascesis.

உடனே  ப்ரஹ்மா தேவர்களோடு வந்து தவம் செய்து கொண்டிருந்த மகாதபஸ்வியான பகீரதனிடம் கூறினார்  - 

*  *  *
भगीरथ महाभाग प्रीतस्तेऽहं  जनेश्वर |
तपसा  सुतप्तेन वरम् वरय सुव्रत ||१६||

4கீ3ரத2 மஹாபா43 ப்ரீதஸ்தேஹம்  ஜநேஶ்வர |
தபஸா  ச  ஸுதப்தேந வரம் வரைய ஸுவ்ரத ||

'Oh, great king Bhageeratha, oh, lord of the people!  I am delighted with the perfectly conducted ascesis of yours, hence oh, truly committed one, you may beseech for a boon.’

பகீரதனே! பாக்யசாலியே  !  மன்னனே ! மிக மேன்மையாக அனுஷ்டிகப்பட்ட உன் தவத்தினால் நான் திருப்தி அடைந்தேன். வேண்டிய வரத்தை கேள்.

*  *  *
तम् उवाच महातेजाः सर्वलोक पितामहम् |
भगीरथो महाभागः कृताञ्जलिरवस्थितः ||१७||

தமுவாச மஹாதேஜா: ஸர்வலோகபிதாமஹம்  |
ப4கீ3ரத2 மஹாபா4க3: க்ருதாஞ்சலிருபஸ்தி2த:||

That great resplendent and highly fortunate king Bhageeratha then remaining with suppliantly adjoined palm-fold spoke to Brahma, the Forefather of all worlds.

எல்லா உலகங்களுக்கும் பிதாமஹரான அவரை பார்த்ததும் பேராற்றல் படைத்த பகீரதன் கைகளை கூப்பி கொண்டு எழுந்து நின்று சொன்னான் 

*  *  *
यदि मे भगवान् प्रीतो यद्यस्ति तपसः फलम् |
सगरस्यात्मजाः सर्वे मत्तः सलिलमाप्नुयुः ||१८||

யதி3மே ப43வாந் ப்ரீதோ யத்3யஸ்தி தபஸ: ப2லம் |
ஸக3ரஸ்யாத்மஜா : ஸர்வே மத்த: ஸலிலமாப்நுயு: ||

 'Oh God! If you are satisfied with my ascesis and if there is any fruition to the ascesis of mine, let all the sons of Sagara get water oblations through me.’

"பகவானே! தாங்கள் என்னிடம் மகிழ்வுடன் இருப்பீர்களேயானால்என்னுடைய நீண்ட கால தவதிற்குரிய பயன் கிடப்பதானால்ஸகரனுடைய மைந்தர்கள் அனைவரும் நீர் பெறுவார்களாக
*  *  *



गन्गायाः सलिलक्लिन्ने  भस्मन्येषां महात्मनाम् |
स्वर्गम् गच्छेयुरत्यन्तं सर्वे मे प्रपितामहाः ||१९||

3ங்கா3யா: ஸலிலக்க்லிந்நே  ப4ஸ்மந்யேஷாம் மஹாத்மநாம் |
ஸ்வர்க்க3ம்  க3ச்சே2யுரத் யந்தம் ஸர்வே மே ப்ரபிதாமஹா:||

 'While the ashes of these great souls are drenched with the waters of Ganga, let all of those great-grandfathers of mine depart to heaven, eternally.
சாம்பல் குவியல்களாக இருக்கும் மகாத்மாக்களான  என்னுடைய  கொள்ளு பாட்டனார்கள்  ,  அவர்கள் கங்கை நீரினால் நனைக்கப்பட்டுஅழிவில்லாத ஸ்வர்க்க லோகத்தை சென்றடைய வேண்டும்"

*  *  *
देया च सन्ततिर्देव नावसीदेत्कुलं च नः|
इक्ष्वाकूणाम् कुले देव एष मेस्तु वरः परः || २०||

தே3யா ச ஸந்ததிர்தேவ  நாவஸீதே3த்குலம் ச ந :|
இக்ஷ்வாகூணாம் குலே தே3வ ஏஷ  மேஸ்து வர: பர: ||

 'Oh, God, I indeed pray for offspring in our Ikshvaku dynasty, let not our dynasty dwindle as I am issueless, and oh, God, let this be the other boon to me. ‘
"தேவனே! எனக்கு சந்ததியை கொடுக்க வேண்டும்.எங்களுடைய இக்ஷ்வாகு பரம்பரை என்னுடன் முடிந்து விடக்கூடாது.இதுவே நான் கோரும் மேலான வரம்"

*  *  *
उक्त वाक्यम् तु राजानम् सर्वलोक पितामहः |
प्रत्युवाच शुभाम् वाणीम् मधुरम् मधुराक्षराम् ||२१||

உக்த வாக்யம் து ராஜாநம் ஸர்வலோக பிதாமஹ:|
ப்ரத்யுவாச  ஶுபா4ம் வாணீம் மது4ராம் மது4ராக்ஷராம் ||

The Forefather of all the worlds, Brahma, then replied the king in an auspicious tongue that is sweet-sounding and sweetly worded, as well.
அனைத்துலக பிதாமஹரான ப்ரஹ்மாஅரசன் சொன்னதை கேட்டு இனிய குரலிலும்  மங்களமான சொற்களாலும் பதிலுரைத்தார் - 

*  *  *
मनोरथो महानेष भगीरथ महारथ |
एवम् भवतु भद्रम् ते इक्ष्वाकु कुल वर्धन ||२२||

மநோரதோமகாநேஷ ப4கீ3ரதமஹாரத2|
ஏவம்  4வது ப4த்3ரம் தே இக்ஷ்வாகு குல வர்த4 ||

 Oh, top-speeded chariot-rider Bhageeratha, this aspiration of yours is sublime, and oh, the furtherer of Ikshvaku dynasty, so be it, let safeness betide you.

"பகீரதனே!  மஹாரதனே !உன்னுடைய மிக உயர்ந்த விருப்பம் அப்படியே ஆகுக!இக்ஷ்வாகு குலம் அழிவில்லாமல் விளங்கும் . நீ வாழ்க"

*  * *
इयं हैमवती गङ्गा ज्येष्ठा हिमवतः सुता |
ताम् वै धारयितुम् राजन् हरस्तत्र  नियुज्यताम् ||२३||

இயம் ஹைமவதி க3ங்கா3 ஜ்யேஷ்டா ஹிமவத: ஸுதா |
தாம் வை தா4ரயிதும் ராஜந் ஹரஸ்தத்ர  நியுஜ்யதாம் ||

This Ganga is the one with snow-broth, the elder daughter of Himavanta, and oh, king Bhageeratha, god Shiva alone is capable to sustain her force in the course of her alighting onto earth, and in fact, he is to be commissioned for that purpose.

"ஹிமவானுடைய மூத்த புதல்வியான கங்கை நதி இறங்கி வரும் மகத்தான வேகத்தை பரமசிவனால் மட்டும் தான் தாங்கி கொள்ள முடியும்அதனால் முதலில் சங்கரன் அருளை பெறுவாயாக

*  *  *
गंगायाः पतनम् राजन् पृथिवी  सहिष्यति  |
ताम् वै धारयितुम्  वीर नान्यं पश्यामि शूलिनः ||२४||
               
3ங்கா3யா:பதநம் ராஜந்  ப்ருதி2வீ ந ந ஸஹிஷ்யதி |
தாம் வை தா4ரயிதும் வீர நாந்யம் பஶ்யாமி ஶுலிந : ||

Brahma spoke to Bhageeratha,  “Oh, king Bhageeratha, the earth cannot endure the downfall of Ganga and to sustain Ganga, oh, king, indeed I do not behold anyone other than the Trident-wielder, God Shiva.”
மன்னனே! கங்கையின் வேகமான விழ்ச்சியை பூமிதேவியால் தாங்கி கொள்ள முடியாது. கங்கையை தாங்கக்கூடிய பேராற்றல் சூலதாரியான பரமசிவனைதவிர எவரிடமும் இல்லை"

*  *  *
तमेवमुक्त्वा राजानम् गंगाम् चाभाष्य लोककृत् |
जगाम त्रिदिवं देवः सह सर्वैर्मरुद्गणैः || २४||

தமேவ முக்தா ராஜாநம்  3ங்கா3ம்  சாபா4ஷ்யா  லோகக்ருத் |
ஜகா3ம த்ரிதி3வம் தே3ஸக ஸர்வைர்மருத3க்க3ணை : ||
Speaking this way to King Bhageeratha and informally greeting Ganga also, that Creator of Worlds, Brahma, left for heaven along with all the groups of gods and Wind-gods." Thus Vishvamitra continued narration about the arrival of River Ganga to earth.
அரசனிடம் இவ்வாறு கூறிவிட்டுகங்கையிடமும் பகீரதனுக்கு உதவி செய்யும்படி பரிந்துரை செய்துவிட்டுமருதக்கணங்களோடு விண்ணுலகத்திற்க்கேரினார் ப்ரஹ்ம்தேவன் 
* * *

इति वाल्मीकि रामायणे आदि काव्ये बाल काण्डे द्वि चत्वारिंशः सर्गः

இத்யார்ஷே  ஸ்ரீமத்3 ராமாயணே  வால்மீகியே ஆதி3  காவ்யே
பா3லகாண்டே3  த்விசத்வாரிம்ஶ: ஸர்க3:!!

Thus, this is the 42nd chapter in Bala Kanda of Valmiki Ramayana, the First Epic poem of India.
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் நாற்பத்தி இரண்டாவது  ஸர்க்கம் முற்றிற்று

* * *